அரசாங்கத்தின் நேட்டோவுடனான உறவுகள் தொடர்பில் கம்யூனிஸ்ட் கட்சி அதிருப்தி
இலங்கை இராணுவம் நேட்டோ அமைப்புடன் பாதுகாப்பு ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திடத் தயாராகி வருவதாகவும், அதற்கு கடும் கண்டனத்தை வெளியிடுவதகாவும் இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது.
நேட்டோ அமைப்புடன் இலங்கை இராணுவம் பாதுகாப்பு ஒப்பந்தம் மேற்கொள்வதற்கான முயற்சிகளை இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாகக் கண்டித்துள்ளது.
நேட்டோ என்பது காலணித்துவ நோக்கங்களைக் கொண்ட ஒரு அமைப்பு என்றும், இத்தகைய ஒப்பந்தங்கள் மூலம் தற்போதைய அரசாங்கத்தின் வெளியுறவுக் கொள்கை உலகிற்கு அம்பலமாகிவிட்டதாகவும் அக்கட்சி சுட்டிக்காட்டியுள்ளது.

பாதுகாப்பு அமைச்சு நேட்டோவுடன் மேற்கொள்ளவுள்ள ஒப்பந்தம் குறித்த விவரங்களை உடனடியாக நாட்டு மக்களுக்கு வெளிப்படுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
இலங்கையுடன் இணைந்து பணியாற்றுமாறு பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் சம்பத் துயகொந்த, நேட்டோ அமைப்பிற்கு அழைப்பு விடுத்துள்ளதாக, செப்டம்பர் 01 ஆம் திகதி பாதுகாப்பு அமைச்சு வெளியிட்ட அதிகாரப்பூர்வ ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக கம்யூனிஸ்ட் கட்சி குறிப்பிட்டுள்ளது.