மட்டக்களப்பில் பாடசாலை ஒன்றில் கணினிகள் கொள்ளை
மட்டக்களப்பு - காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள ஆரையம்பதி செல்வநகர் சிவா வித்தியாலயத்தின் கணினி அறைக் கதவை உடைத்து அங்கிருந்த மூன்று கணினிகள், மவூஸ், கீபோட் என்பன நேற்று(1) இரவு கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த பாடசாலை பூட்டப்பட்டிருந்த நிலையில் சம்பவதினமான நேற்று இரவு பாடசாலையின் கணனி பிரிவு அறையின் கதவை உடைத்து அங்கிருந்த மூன்று கணினிகள், ஒரு மவூஸ், ஒரு கீபோட் என்பன கொள்ளையிடப்பட்டுள்ளன.
இது தொடர்பாகப் பாடசாலை அதிபர் இன்று பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததையடுத்து சம்பவ இடத்துக்குச் சென்று கொள்ளையிடப்பட்ட பகுதியைப் பார்வையிட்டு பொலிஸ் தடயவியல் பிரிவை அழைத்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழர் அரசியலும் சிங்கள பௌத்த அரசியல் மனநிலையும்.. 1 மணி நேரம் முன்
பாக்கியராஜ் மறைவு... தனது ஆயுளில் 10 ஆண்டுகளை கொடுக்க ஆசைப்பட்ட சாந்தனு! கலங்க வைக்கும் காணொளி Manithan
முருகன் பிறந்த இடம் வடநாடா? கொந்தளித்த தமிழ் மக்கள்.. ஜூனியர் என்.டி.ஆர் படத்திற்கு எதிர்ப்பு.. Cineulagam