வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு வரும் அனைவருக்கும் கட்டாய தனிமைப்படுத்தல்
வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு வருகை தரும் இலங்கையர்கள் உட்பட அனைவரும் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
புதிய சுகாதார வழிகாட்டலின் அடிப்படையில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்படி இலங்கையர்கள், இரட்டை பிரஜாவுரிமைபெற்றவர்கள், சுற்றுலா பயணிகள், வெளிநாட்டு பிரஜைகள் மற்றும் இராஜதந்திரிகள் என வெளிநாடுகளிலிருந்து இலங்கைவரும் அனைவரும் 14 நாட்கள் தனிமைப்படுத்தலில் இருக்க வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களாகினும் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள். தனிமைப்படுத்தப்பட்டுள்ள நபர்கள், தொற்றாளர் ஒருவருடன் நெருங்கிய தொடர்பை பேணியவர் என அடையாளம் காணப்பட்டால் தனிமைப்படுத்தல் காலம் மேலும் நீடிக்கப்படும்.
இரண்டு வயதுக்குக் குறைவான குழந்தைகளுக்கு முதல் நாள் வருகையில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது மற்றும் PCR சோதனையிலிருந்து வெளியேறலாம்.
இந்த புதிய அறிவிப்பு எதிர்வரும் 31 ஆம் திகதிவரை அமுலில் இருக்கும்
இலங்கை மற்றும் பிற நாடுகளின் எதிர்கால கொவிட் நிலைமையை கருத்திற் கொண்டு இந்த தனிமைப்படுத்தல் காலத்தில் திருத்தம் மேற்கொள்ளப்படலாம் என்றும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
ஈரானின் இந்து சமுத்திர துறைமுகங்களை முடக்கி அடிபணிய வைக்க முடியுமா 21 மணி நேரம் முன்
கடன் விஷயத்தில் முத்து-மீனா செய்த காரியம், ஷாக்கில் ரவி, ஸ்ருதி... சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam
ட்ரம்ப் நிகழ்ச்சி துப்பாக்கிதாரியின் கொலைப்பட்டியல்... விடுபட்டிருந்த ஒரு முதன்மை அதிகாரியின் பெயர் News Lankasri
அடுத்த டிராமாவை போட்ட குணசேகரன், ஈஸ்வரி கேட்ட கேள்வி, ஷாக்கில் குடும்பம்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
ஈரானின் எண்ணெய் குழாய்கள் வெடித்துச் சிதறும்... இன்னும் சில நாட்களில்: ட்ரம்ப் மர்மப் பேச்சு News Lankasri