1500 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்ட உரம் 10000 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகின்றது!
நாட்டில் 1500 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்ட உரம் தற்பொழுது பத்தாயிரம் ரூபாவிற்கு விற்பனை செய்பய்படுவதாக உரச் செயலகத்தின் உயர் அதிகாரியொருவர் குறிப்பிட்டுள்ளார்.
இரசாயன உரத்திற்கு தடை விதிக்கப்பட முன்னதாக 50 கிலோ கிராம் எடையுடைய ஒரு மூட்டை உரம் 1500 முதல் 2000 ரூபா வரையில் விற்பனை செய்யப்பட்டது.
எனினும் தற்பொழுது ஒரு மூட்டை உரம் சுமார் பத்தாயிரம் ரூபா வரையில் விற்பனை செய்யப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இறக்குமதி செய்யப்படும் இரசாயன உரத்தை விவசாயிகளினால் கொள்வனவு செய்யக்கூடிய நியாயமான விலைக்கு விற்பனை செய்வது குறித்து இறக்குமதியாளர்களுடன் பேச்சுவார்த்தை நடாத்தி வருவதாக குறித்த அதிகாரி தெரிவித்துள்ளார்.
விவசாயிகளுக்கு நிவாரணங்களை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அந்த அதிகாரி தெற்கு ஊடகமொன்றிடம் தெரிவித்துள்ளார்.

தலைநகரில் இருந்து 600,000 மக்களை வெளியேற்றும் நேட்டோ உறுப்பு நாடு... புடினின் அடுத்த இலக்கு News Lankasri

மகாநதி சீரியலில் அடுத்து விஜய்க்கும், வெண்ணிலாவிற்கும் திருமணம் நடக்கப்போகிறதா?.. படப்பிடிப்பு தள போட்டோ Cineulagam

அமெரிக்காவிற்குள் விசா இல்லாமல் நுழைய 41 நாடுகளுக்கு அனுமதி: விதிமுறைகள், ESTA தேவைகள் News Lankasri
