இந்தியாவில் இருந்து வடக்கு கடற்கரைக்கு வரும் ஆற்றுவாழை தாவரங்கள்
இந்தியாவில் இருந்து இலங்கை வடக்கு கடற்கரையில் கரையொதுங்கும் ஆற்றுவாழை தாவரங்களை பசுந்தாள் உரமாக (Green manure)தயாரிக்கப்பட்டு செறிவான உரமாக பயன்படுத்தமுடியும் என விவசாயிகள் கருத்து தெரிவித்துவருகின்றனர்,
சீரற்ற காலநிலை காரணமாக வடக்கு கடற்கரையில் அண்மைய நாட்களாக தாவரங்கள் பல கரையொதுங்கி வருகின்றன. குறிப்பாக யாழ்ப்பாணம் மற்றும் முல்லைத்தீவு கடற்கரையில் பல கிலோமீற்றர் தூரத்துக்கு இவ்வாறு தாவரங்கள் கரையொதுங்கியுள்ளன.
குறித்த தாவரங்கள் இந்தியா- தமிழ்நாட்டில் உள்ள ஆறுகளில் காணப்படும் ஆற்றுவாழை
தாவரம் என்று தெரிவிக்கப்படுகின்றது.
இந்த நிலையில் இவ்வாறு கரை ஒதுங்கியுள்ள ஆற்றுவாழை தாவர கழிவுகள் பல ஒன்றாகச்
சேர்க்கப்பட்டு, மக்கவிடப்பட்டு அல்லது சிதைமாற்றத்திற்கு உட்படுத்தப்பட்டும்
இயற்கை உரமாகப் பயிர்களுக்கு அளிக்கப்படலாம் என்று விவாசாயிகள்
கருத்து வெளியிட்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.
மிகப்பெரிய தாக்குதலுக்கு தயாராகும் அமெரிக்கா: அண்டை நாடுகளுக்கு ஈரான் கடும் எச்சரிக்கை News Lankasri
எங்களுக்கு சாதகமாக தான் நீதிமன்ற உத்தரவு, ரவி மோகன் இவ்வளவு கொடுக்கணும்: ஆர்த்தியின் அம்மா Cineulagam