பிரதமரை இழிவுபடுத்தியதாக ஆசிரியர் ஒருவருக்கு எதிராக சி.ஐ.டியில் முறைப்பாடு
பிரதமரும் கல்வி அமைச்சருமான ஹரினி அமரசூரியவிற்கு எதிராக சேறு பூசியதாக ஆசிரியர் ஓருவர் தொடர்பில் குற்றப் புலனாய்வு பிரிவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
கண்டியில் அமைந்துள்ள பிரபல பாடசாலையொன்றின் விஞ்ஞான பாட ஆசிரியர் ஒருவருக்கு எதிராக இவ்வாறு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
முறைப்பாடு
மத்திய மாகாண ஆளுனரின் இணைப்பாளர் சம்பத் விக்ரமசிங்க என்பவரினால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த பாடசாலை ஆசிரியர் பிரதமரின் உருவப்படத்தை வரைந்து இட்டுள்ள குறிப்பில் மிக இழிவான சேறுபூசும் தகவல்கள் உள்ளடக்கப்பட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இந்த பதிவு மூலம் பிரதமருக்கு பெரும் அவதூறு இழைக்கப்பட்டுள்ளதாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விடயம் தொடர்பில் மத்திய மாகாண கல்விப் பணிப்பாளர் மற்றும் ஆசிரியர் கற்பிக்கும் பாடசாலையின் அதிபர் ஆகியோருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.