உடனடி பொது முடக்கத்திற்கு தயாராகிறதா இலங்கை? தீவிரமாக ஆராயும் அரச உயர்மட்டம்
கோவிட் தீவிரத்திற்கு மத்தியில் இந்தியாவில் அடையாளம் காணப்பட்ட டெல்டா திரிபு இலங்கையில் பல பிரதேசங்களில் பரவியிருக்கலாமென அஞ்சப்படுவதால் உடனடி பொது முடக்கம் ஒன்றுக்கு செல்வது குறித்து அரச உயர்மட்டத்தில் ஆராயப்படவுள்ளதாக அறியமுடிவதாக தமிழ் பத்திரிகையொன்று இன்றைய தினம் செய்தி வெளியிட்டுள்ளது.
அரச உயர்மட்டததில் இன்று விசேட கூட்டம் இடம்பெறவுள்ளதாகவும் இதன்போது இந்த விடயம் குறித்து ஆழமாக ஆராயப்பட்டதன் இறுதி முடிவு எடுக்கப்படவுள்ளதாகவும் அறியமுடிவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
நாட்டின் பல பகுதிகளிலும் டெல்டா திரிபு என்ற சந்தேகத்தில் பல கோவிட் நோயாளர்கள் அடையாளம் காணப்படுள்ள நிலையில் நாட்டின் ஏனைய பகுதிகளுக்கு பரவாதிருக்கும் நோக்கத்தில் இவ்வாறு பொது முடக்கம் ஒன்றுக்கு செல்வது குறித்து ஆராயப்படவுள்ளதாக அறிய முடிந்துள்ளது.
மேலும் தற்போதுள்ள தரவுகளை கொண்டு நாட்டின் கோவிட் நிலைமைகளை மூடி மறைக்க நினைத்தாலும் அடுத்த இரண்டு வாரங்களின் பின்னர் நாட்டின் உண்மையான நிலைமை என்னவென்பது வெளிப்பத்தான் போகின்றதென பொது சுகாதார பரிசோதகர் சங்கத்தின் தலைவர் வைத்தியர் உபுல் ரோஹண தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் இன்னும் பல முக்கிய செய்திகளை உள்ளடக்கி வருகிறது இன்றைய தினத்திற்கான பத்திரிகைகளின் கண்ணோட்டம்,

உள்ளூராட்சி தேர்தலில் விழிப்படைந்த சிறுபான்மை சமூகம் 16 மணி நேரம் முன்

இந்தியாவால் கொல்லப்பட்ட பயங்கரவாதிகள் இறுதிச்சடங்கில் கவனம் ஈர்த்த நபர்... யாரிந்த அப்துல் ரவூஃப் News Lankasri

சரிகமப Li'l Champs சீசன் 4 திவினேஷ் ஆசையை நிறைவேற்றிய பாடகர் ஸ்ரீநிவாஸ்.. சந்தோஷத்தில் குடும்பம் Cineulagam

மௌன ராகம் படத்தில் கார்த்திக் கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க இருந்தது இவர்தானா?- வருத்தப்பட்ட பிரபலம் Cineulagam

இந்த ராசியில் பிறந்தவர்கள் புலி போல் பதுங்கி இருந்து வேலைப்பார்ப்பார்களாம்.. நீங்க என்ன ராசி? Manithan
