புனரமைக்கப்பட்ட ஒரு வருடத்திற்குள் முழுமையாக சேதமடைந்த வீதி
கிளிநொச்சி - கண்டாவளை பிரதேச செயலக பிரிவில் உள்ள தர்மபுரம் கிராமத்தில் 7 ஆம் ஒழுங்கை கடந்த வருடம் ஏழாம் மாதம் தார் வீதியாகப் புனரமைக்கப்பட்டு மக்கள் பாவனைக்கு விடப்பட்டு ஒரு வருடத்திற்குள் முற்று முழுதாக சேதமடைந்துள்ளது.
நிறைந்த கிராமம் அபிவிருத்தி திட்டத்தின் கீழ் கண்டாவளை பிரதேச செயலகத்தினால் இரண்டு மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டு கரைச்சி பிரதேச சபையின் தொழில்நுட்ப மேற்பார்வையில் பிரதேச சபைக்குச் சொந்தமான வீதி மாதர் கிராம அபிவிருத்திச் சங்கத்திடம் ஒப்பந்தம் வழங்கப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.
வீதி புனரமைப்புக்கான ஒப்பந்தத்தை மாதர் கிராம அபிவிருத்திச் சங்கம் பெற்றிருந்தாலும் வீதி புனரமைப்பு பணிகளைத் தனியார் ஒப்பந்தக்காரர் ஒருவர் மேற்கொள்வதற்கு மாதர் கிராம அபிவிருத்திச் சங்கம் அனுமதி வழங்கியிருந்திருந்தது.
எனவே குறித்த வீதியின் பணிகள் கடந்த வருடம் ஏழாம் மாதம் நிறைவுபெற்றிருந்தது. ஒப்பந்த காலத்தில் புனரமைப்பு பணிகளின் தொழில்நுட்ப மேற்பார்வை மற்றும் கொடுப்பனவுகளுக்கான சிபார்சுகளை கரைச்சி பிரதேச சபையே மேற்கொண்டிருந்தது.
ஆனால் குறித்த வீதியின் தரமற்ற புனரமைப்பு காரணமாக ஒரு வருடத்திற்குள் முற்று முழுதாக சேதமுற்று பொது மக்கள் போக்குவரத்து செய்ய முடியாத நிலையில் காணப்படுகிறது.
எனவே இது தொடர்பில் பிரதேச பொது மக்கள் கவலை தெரிவித்துள்ளதோடு, மேற்பார்வை மற்றும் தொழில்நுட்ப கண்காணிப்பினை மேற்கொண்ட கரைச்சி பிரதேச சபையின் மீதும் தங்களது விசனத்தைத் தெரிவித்துள்ளனர்.
முறைகேடனான
அபிவிருத்திப் பணிகளை கண்டுகொள்ளதாக திணைக்களங்கள் மீதும் மக்கள்
குற்றம் சுமத்தியுள்ளனர்.



புதிய சீரியலில் கமிட்டாகியுள்ள கண்ணே கலைமானே சீரியல் நடிகை... எந்த தொலைக்காட்சி தொடர் தெரியுமா? Cineulagam
Bigg Boss: இது உங்க வீடு இல்லை... நீங்க கெஸ்ட் இல்லை! நண்பன் மனைவியிடம் சீறி பாய்ந்த விஜய் சேதுபதி Manithan
பாண்டியன் மொத்த குடும்பத்தையும் போலீஸ் ஸ்டேஷன் அனுப்பிய மயில் அம்மா.... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 பரபரப்பு புரொமோ Cineulagam
இந்தியாவில் சிக்கித் தவிக்கும் H-1B ஊழியர்கள்... விசா புதுப்பித்தல் சந்திப்புகள் ரத்து News Lankasri