பிரித்தானியா வருபவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி! - அரசாங்கம் வெளியிட்ட அறிவிப்பு
பிரித்தானியாவில் நடைமுறையில் இருந்த அனைத்து கோவிட் கட்டுப்பாடுகளும் முடிவுக்கு கொண்டு வரப்படவுள்ளதாக அந்நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது.
இதன்படி, எதிர்வரும் வெள்ளிக்கிழமை அதிகாலை 4 மணி முதல் அனைத்து கோவிட் கட்டுப்பாடுகளும் முடிவுக்கு கொண்டுவரப்படவுள்ளதாக போக்குவரத்து செயலாளர் கிராண்ட் ஷாப்ஸ் தெரிவித்துள்ளார்.
அந்த வகையில், கோவிட் பரவல் ஆரம்பித்த பின்னர் முதல் முறையாக விடுமுறைக்கு வருபவர்கள் எந்த தடையும் இன்றி பிரித்தானியாவிற்குள் நுழைய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
TRAVEL UPDATE
— Rt Hon Grant Shapps MP (@grantshapps) March 14, 2022
All remaining Covid travel measures, including the Passenger Locator Form and tests for all arrivals, will be stood down for travel to the UK from 4am on 18 March.
These changes are possible due to our vaccine rollout and mean greater freedom in time for Easter.
எனினும், முழுமையாக தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்கள் மட்டுமே சோதனைகள் தேவையில்லாமல் பிரித்தானியாவிற்குள் நுழைய முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், அவர்கள் பயணம் செய்த 72 மணி நேரத்திற்குள் பயணிகள் இருப்பிடப் படிவத்தை பூர்த்தி செய்ய வேண்டும், அவர்களின் முகவரி, தொலைப்பேசி எண், கடவுச்சீட்டு மற்றும் விமான விவரங்களைப் பகிர்ந்து கொள்ள வேண்டும்.
இந்த படிவங்கள் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அறிமுகம் செய்யப்பட்டன. பிரித்தானியாவிற்கு வருபவர்கள் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டபோது, பயணிகள் விதிகளைப் பின்பற்றுகிறார்களா என்பதைச் சரிபார்க்க உதவும்.
இதனிடையே, கோவிட் நோயால் பாதிக்கப்பட்ட வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படும் நோயாளிகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது, பிரித்தானியாவில் வாரத்திற்கு வாரம் 19 வீதம் அதிகரித்துள்ளது.
பிரித்தானியாவில் கோவிட் தொற்றுடன் வைத்தியசாலையில் அனுமதிப்பது ஓமிக்ரோன் மற்றும் முந்தைய அலைகளின் போது எட்டப்பட்ட உச்சங்களை விட மிகக் குறைவாகவே இருக்கின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.