மருந்துகள் மற்றும் கடவுச்சீட்டுகள் பற்றாக்குறைக்கு பொறுப்பு கூறுமாறு முறைப்பாடு
மருந்துகள் மற்றும் கடவுச்சீட்டுகள் பற்றாக்குறைக்கு பொறுப்பான அதிகாரிகளிடம் இருந்து பொறுப்புக் கூறலை கோருமாறு, தொழில்சார் வர்த்தக மற்றும் சிவில் சமூக அமைப்புகளின் கூட்டமைப்பு குற்றப் புலனாய்வுத் திணைக்களம் மற்றும் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிடம் முறைப்பாடு செய்துள்ளது.
தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை ஆணையத்தின் முக்கியமான தரவுகளை தவறாகப் பயன்படுத்தியமை மற்றும் கடவுச்சீட்டு கேள்விப்பத்திரம் தொடர்பான விசாரணைகள் மீண்டும் நடத்தப்பட வேண்டும் என்று கூட்டணியின் இணைத் தலைவரான சமல் சஞ்சீவ ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார்.
இந்தப் பிரச்சினைகள் குறித்து பல ஆண்டுகளுக்கு முன்பே தெரிவிக்கப்பட்டாலும், முறையான விசாரணைகள் முடிக்கப்படவில்லை.
குடிவரவு மற்றும் குடியகல்வு
குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் ஒரு கிளையில் மேற்கொள்ளப்பட்ட மோசமான நிர்வாகமே தற்போதைய கடவுச்சீட்டு தட்டுப்பாட்டுக்கு காரணமாக உள்ளது.
இந்தநிலையில் குடிமற்றும் குடியகல்வு திணைக்களத்தின் கடவுச்சீட்டு வழங்கும் பொறுப்பு குறித்து பொது பாதுகாப்பு பிரதி அமைச்சர் சுனில் வட்டகலவிடம் சிவில் சமூக குழு ஒன்று முறைப்பாடு செய்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |