குவியும் முறைப்பாடுகள்: நாடாளுமன்ற உறுப்பினருக்கு ஏற்பட்ட சிக்கல்
கடந்த ஆண்டில் (2023) இலஞ்சம் அல்லது ஊழல் விசாரணை ஆணைக்குழுவிற்கு 3,431 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.
இதற்கமைய, முறைப்பாட்டு பிரிவிற்கு அனுப்பப்பட்ட முறைப்பாடுகளின் எண்ணிக்கை 2,789 ஆகும்.
மேலும்,131இலஞ்ச முறைப்பாடுகள், 945 ஊழல் முறைப்பாடுகள், 76 முறைகேடான ஆதாய முறைப்பாடுகள் என மொத்தம் 1,152 முறைப்பாடுகள் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
குவியும் முறைப்பாடுகள்
இதன்படி, போதிய உண்மை தகவல்கள் இல்லாத காரணத்தினால் இலஞ்ச ஒழிப்புச்சட்டத்திற்குப் பொருந்தாத மற்றும் பரிசீலிக்கப்படுவதில்லை என முடிவு செய்யப்பட்டுள்ள முறைப்பாடுகளின் எண்ணிக்கை 766 என்றும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், கடந்த ஆண்டு இலஞ்சம் மற்றும் ஊழல் தொடர்பான திடீர் சோதனை நடவடிக்கைகளின் போது 57 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர், உள்ளுராட்சி சபையின் முன்னாள் தலைவர், பொலிஸ் பரிசோதகர், உப பொலிஸ் பரிசோதகர், அதிபர், கிராம உத்தியோகத்தர்கள் மற்றும் அரச உத்தியோகத்தர் ஒருவர் அடங்குவதாக அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |