அங்கஜன் கட்சியினரை வெளியேற்றுமாறு பொலிஸில் முறைப்பாடு
சிறிலங்கா சுதந்திர கட்சியின் யாழ். சண்டிலிப்பாய் மக்கள் தொடர்பாடல் அலுவலகத்தில் இருந்து குறித்த கட்சியினரை வெளியேற்றுமாறு கோரி மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்று செய்யப்பட்டுள்ளது.
இந்த முறைப்பாடானது தொடர்பாடல் அலுவலகம் அமைந்துள்ள வீட்டின் உரிமையாளரால் பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மக்கள் தொடர்பாடல் அலுவலகம் என நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதனால் ஆரம்பிக்கப்பட்ட அலுவலகத்தினை விட்டு வெளியேறுமாறு உரிமையாளரால் கோரிக்கை விடுக்கபட்டுவந்துள்ளார்.
வீட்டு உரிமையாளரால் முறைப்பாடு
இந்நிலையில் அவர்கள் வெளியேறாத காரணத்தினால் இன்று வீட்டு உரிமையாளரால் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதே வேளை குறித்த அலுவலகம் பெரும்பாலான நேரங்களில் பாவனையற்று மூடி இருப்பதாக அப்பகுதி மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

சாட்ஜிபிடி உதவியால் 46 நாட்களில் 11 கிலோ எடை குறைத்த நபர் - என்ன உணவுகள் எடுத்து கொண்டார்? News Lankasri

படுக்கையில் நெப்போலியன் மகன்... எலும்பும் தோலுமாக மாறியதற்கு என்ன காரணம்? நேரில் சந்தித்த பிரபலம் Manithan
