ரொஷானுக்கு எதிராக இலஞ்ச, ஊழல் ஆணைக்குழுவில் முறைப்பாடு
இலங்கை கிரிக்கெட் நிறுவனம், முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ரொஷான் ரணசிங்கவுக்கு எதிராக இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
தேசிய விளையாட்டு நிதியத்துக்கு இலங்கை கிரிக்கெட் நிறுவனம் வழங்கிய நிதியை அவர் மோசடி செய்துள்ளார் என்று இன்று முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதேவேளை, முன்னாள் விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் பதவிகளில் இருந்து ரொஷான் ரணசிங்க கடந்த வாரம் (27.11.2023) பிற்பகல் அதிரடியாக பதவி நீக்கம் செய்யப்பட்டிருந்தார்.
இந்நிலையில், இலங்கை கிரிக்கெட் மீதான தடையை நீக்குவதற்கு தேவையான நடவடிக்கைகள் இந்த வாரத்திற்குள் மேற்கொள்ளப்படும் என விளையாட்டுத் துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

வெள்ளத்தில் தத்தளிக்கும் சென்னை: பொது மக்களை வெளியே வர வேண்டாம் என எச்சரிக்கை - மிரட்டும் மிக்ஜாம் புயல்

“அழகியை பத்திரமாக பார்த்துக்கோங்க சார்”... வசியின் இன்ஸ்டா பதிவிற்கு பிரியங்கா ரசிகர்கள் பதில் Manithan
