அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் இடம்பெறும் முறைகேடுகள் தொடர்பில் முறைப்பாடு
அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் இடம்பெறும் முறைகேடுகள் தொடர்பில் அச்சுவேலி பகுதி மக்களினால் யாழ்ப்பாண மாவட்ட பொலிஸ் உயரதிகாரிகள் மட்டத்தில் முறைப்பாடுகள் செய்யப்பட்டது.
இதனையடுத்து இன்றையதினம் யாழ்ப்பாண மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அச்சுவேலி பொலிஸ் நிலையத்திற்கு திடீர் விஜயம் மேற்கொண்டார். விஜயத்தின் போது அங்கே பல்வேறு விடயங்கள் தொடர்பில் ஆராய்ந்துள்ளார்.
அச்சுவேலி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தொடர்பில் பல்வேறுபட்ட குற்றச்சாட்டுகள் பொதுமக்களால் யாழ்ப்பாண மாவட்ட பொலிஸ் உயர் மட்டங்களிற்கு முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ள நிலையில், இன்றைய தினம் யாழ். மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அச்சுவேலி பொலிஸ் நிலையத்திற்கு திடீர் விஜயத்தினை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.