கொரோனாவால் இறக்கும் நபர்களின் உடல்களை தகனம் செய்வதற்கு எதிராக ஜெனிவாவில் முறைப்பாடு
இலங்கையில் கொரோனா தொற்று நோய் காரணமாக உயிரிழந்த முஸ்லிம்களின் ஜனாஸாக்கள் தகனம் செய்யப்படுவதற்கு எதிராக ஜெனிவா மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடுகளை செய்ய தயார் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
சுவிற்சர்லாந்தின் ஜெனிவா நகரில் இயங்கும் சிவில் அமைப்புகள் மற்றும் சில செயற்பாட்டுக் குழுக்கள் இந்த முறைப்பாடுகளை தனித்தனியாக முன்வைக்க உள்ளன.
எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள மனித உரிமை பேரவையின் கூட்டத் தொடரில் எழுத்து மூலமான முறைப்பாடுகளை முன்வைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
கொரோனாவால் இறக்கும் நபர்களின் உடல்களை அடக்கம் செய்வதால், வைரஸ் பரவ வாய்ப்பில்லை என கூறியுள்ள நிபுணர்களின் குழுவின் அறிக்கையையும் முறைப்பாட்டில் இணைக்க உள்ளதாக கூறப்படுகிறது.

கொடூர வில்லனாக மாறிய குணசேகரன், தனது அம்மாவையே இப்படி செய்வாரா?... எதிர்நீச்சல் பரபரப்பு புரொமோ Cineulagam

முதல் முயற்சியிலேயே UPSC தேர்வில் தேர்ச்சி பெற்று.., ஐஏஎஸ் ஆகாத மிஸ் இந்தியா இறுதிப் போட்டியாளர் News Lankasri
