சரத் பொன்சேகாவினால் தாக்கல் செய்யப்பட்ட முறைப்பாட்டிற்கு எதிராக முன்வைக்கப்படவுள்ள ஆட்சேபனைகள்
பீல்ட் மார்சல் சரத் பொன்சேகாவினால் தாக்கல் செய்யப்பட்ட முறைப்பாட்டிற்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் அதன் உறுப்பினர்கள் ஆட்சேபனைகளை முன்வைக்க எதிர்பார்த்துள்ளனர்.
பீல்ட் மார்சல் சரத் பொன்சேகாவை கட்சி உறுப்புரிமை மற்றும் பதவிகளில் இருந்து நீக்குவதைத் தடுத்து, கடந்த பெப்ரவரி 19 ஆம் திகதி கொழும்பு மாவட்ட நீதிமன்றம் தடை உத்தரவை பிறப்பித்தது.
கட்சி உறுப்புரிமை
இதற்கு எதிராக ஆட்சேபனைகளை முன்வைக்கவுள்ளதாக கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாச தனது சட்டத்தரணி ஊடாக கொழும்பு மாவட்ட நீதிமன்றில் இன்று(04.03.2024) அறிவித்துள்ளார்.
முன்னாள் இராணுவத் தளபதி தயா ரத்நாயக்கவுக்கு கட்சி உறுப்புரிமை வழங்கிமைக்கு எதிராக சரத் பொன்சேகா தெரிவித்த கருத்துக்களின் அடிப்படையில் அவரை பதவி நீக்கம் செய்வதற்கு ஐக்கிய மக்கள் சக்தி முனைப்புக்களை மேற்கொண்டது. இதற்கு எதிராகவே சரத் பொன்சேகா தடை உத்தரவைப் பெற்றுள்ளார்.

தாயின் கையால் ஒரு பிடி சாப்பாட்டுக்கு ஏங்கிய சாந்தனுக்கு வாய்க்கரிசி இடும் போது துடிதுடித்த நிமிடங்கள்
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |