சுமந்திரனுக்கு எதிராக முறைப்பாட்டை பதிவு செய்த சிறீதரன்
இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளரான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரனுக்கு எதிராக தேசிய மக்கள் சக்தியினரால் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
யாழ். மாவட்ட தேர்தல் அலுவலகத்திலும் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்திலும் தேசிய மக்கள் சக்தியின் யாழ். மாவட்ட குழு உறுப்பினர் பூலோகராசா சிறீதரன் என்பவரால் குறித்த முறைப்பாடு நேற்று பதிவு செய்யப்பட்டுள்ளது.
முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ள விடயம்
தேசிய மக்கள் சக்தியின் யாழ். மாநகரசபை முதன்மை வேட்பாளர் சுந்தரமூர்த்தி கபிலன் யாழ். மாநகர சபையின் உறுப்பினராக கூட வர முடியாது என அச்சுறுத்தும் வகையில் சமூக வலைத்தளம் மூலம் சுமந்திரன் கருத்து தெரிவித்தாக குறித்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை யாழ். மாநகர மேயர் வேட்பாளர் கபிலன் வேட்புமனுவில் போலியான வதிவிட முகவரியை வழங்கியமை தொடர்பில் நாங்கள் செய்ய வேண்டிய முறைப்பாட்டை சொந்த கட்சியினரே செய்துள்ளனர். இது நல்லவிடயம். அடுத்த கட்ட நடவடிக்கைகளை நாங்கள் எடுப்போம் என தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.




அமெரிக்காவால் ஈரானில் ஒரு ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த முடியுமா..! 22 மணி நேரம் முன்
வெளியே போக சொன்ன சேது, அதிர்ச்சி முடிவு எடுத்த தமிழ்ச்செல்வி... சின்ன மருமகள் சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam
Tamizha Tamizha: காதலித்த கணவருக்கு கண்முன் நடந்த இரண்டாவது திருமணம்! 14 ஆண்டுகளாக குறையாத காதல் Manithan