ஆளும் தரப்பு அமைச்சர்கள் இருவரின் மனைவிமாருக்கு எதிராக முறைப்பாடு
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் முக்கிய அரசியல்வாதிகள் இரண்டுபேரின் மனைவிமாருக்கு எதிராக இலஞ்சம் மற்றும் ஊழல், மோசடி தடுப்பு ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
அமைச்சர் சமந்த வித்தியாரத்ன மற்றும் பிரதியமைச்சர் நாமல் கருணாரத்ன ஆகியோரின் மனைவிமாருக்கு எதிராகவே மேற்குறித்த முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
நவஜனதா பெரமுண கட்சி குறித்த முறைப்பாட்டை மேற்கொண்டுள்ளது.
பணம் எங்கிருந்து கிடைத்தது
முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, பிரதியமைச்சர் நாமல் கருணாரத்னவின் மனைவி ஒரு அரசாங்கப்பாடசாலை ஆசிரியை. ஆனால் அவரது வங்கிக் கணக்கில் ஆறு மில்லியன் ரூபா சேமிக்கப்பட்டுள்ளது.
அதற்கான பணம் எங்கிருந்து கிடைத்தது என்பதை ஆராய வேண்டும்.
அதேபோல அமைச்சர் சமந்த வித்தியாரத்னவின் மனைவியும் ஒரு ஆசிரியையே. அவர் பதினைந்திற்கும் மேற்பட்ட வங்கிக் கணக்குகளை வைத்துள்ளார்.
அதுகுறித்தும் விசாரிக்கப்பட வேண்டும் என்று நவஜனதா பெரமுண கட்சி முறைப்பாடு செய்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



