புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றுவதற்கு அனுமதிக்காத அதிபருக்கு எதிராக முறைப்பாடு

Mullaitivu Grade 05 Scholarship examination
By Parthiban Nov 14, 2023 09:29 PM GMT
Report

வன்னியில் உள்ள பாடசாலை ஒன்றின் அதிபர் ஒருவர், உடல் நலக்குறைவு காரணமாக இரண்டு மாதங்களாக பாடசாலைக்குச் செல்லாத ஐந்து வயதுக் சிறுவகை புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தோற்றுவதற்கான வாய்ப்பை மறுத்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

தனது மகனுக்கு சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்ட காரணத்தினால் புலமைப்பரிசில் பரீட்சை எழுதும் வாய்ப்பை மறுத்த, ஆசிரியர்கள் புலமைப்பரிசில் பரீட்சை முக்கியமில்லை என கூறியதாக சிறுவனின் தாய் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் வவுனியா அலுவலகத்தில் நவம்பர் 8ஆம் திகதி முறைப்பாடு செய்துள்ளார்.

முல்லைத்தீவு கல்வி வலயத்திற்குட்பட்ட புதுக்குடியிருப்பு, கோம்பாவில் விக்னேஸ்வர வித்தியாலயத்தில் ஐந்தாம் தரத்தில் கல்வி கற்கும் சிறுவனே பரீட்சைக்குத் தோற்றும் வாய்ப்பை இழந்துள்ளதாக பிரதேச ஊடகவியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

ஹமாஸின் அதிர்ச்சிகரமான தாக்குதல் திட்டம்: இஸ்ரேலின் எல்லைகளைக் கடந்து விரிவடைய இருக்கின்ற யுத்தம் (Video)

ஹமாஸின் அதிர்ச்சிகரமான தாக்குதல் திட்டம்: இஸ்ரேலின் எல்லைகளைக் கடந்து விரிவடைய இருக்கின்ற யுத்தம் (Video)


மகனின் வயிற்றில் சத்திர சிகிச்சை செய்ததால் சுமார் இரண்டு மாதங்கள் அவரால் பாடசாலைக்கு செல்ல முடியவில்லை என, ஒக்டோபர் 15ஆம் திகதி புலமைப்பரிசில் பரீட்சை நடைபெறவுள்ளதால், முதல் வாரத்தில் இருந்து பிள்ளை அதற்கு முதல் வாரத்தில் இருந்து மீண்டும் பாடசாலைக்கு சென்றதாக தாய் குறிப்பிட்டுள்ளார்.

புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றுவதற்கு அனுமதிக்காத அதிபருக்கு எதிராக முறைப்பாடு | Complaint Against Principal For Disallowing Exam

ஆனால், பரீட்சைக்குத் தோற்றுவதற்குத் தேவையான சுட்டெண் குறித்து விசாரிக்க பாடசாலைக்குச் சென்ற தாயாருக்கு, இந்தக் சிறுவனுக்கு பரீட்சையை எதிர்கொள்ள சந்தர்ப்பம் வழங்க முடியாது என பாடசாலை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரதேச ஊடகவியலாளர்களிடம் பாடசாலையில் தனக்கு ஏற்பட்ட அனுபவத்தை விபரித்த தாய் மகேந்திரன் ஜனனி, தனது பிள்ளை பரீட்சைக்குத் தோற்ற முடியாது என பாடசாலை நிர்வாகம் தன்னிடம் இருந்து கடிதம் எழுதிப் பெற்றுக்கொண்டதாக குறிப்பிட்டுள்ளார்.

பாடசாலைக்கு அவமரியாதை

"நாங்கள் போய் கேட்டபோது அதிபர் சொன்னார், அவருக்கு எழுத முடியாது 70ற்கும் குறவைாகவே புள்ளிகளைப் பெறுகின்றார் என்பதால் எழுத முடியாது எனக் கூறியுள்ளார்.

அதன் பின்னர் நாங்கள் அதனையே அப்படியே விட்டுவிட்டோம். கூப்பிடுவார்கள் என நம்பி காத்திருந்தோம். கூப்பிடவில்லை. உடைகள் எல்லாம் தைத்து ஆயத்தமாகவே இருந்தோம்.

லண்டனில் தீ விபத்து: ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் பலி

லண்டனில் தீ விபத்து: ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் பலி


ஒரு கிழமைக்கு பின்னர் பாடசாலைக்கு அழைத்சதுச் சென்றபோது சிவநாதன் ஆசிரியர் அவரை அடித்து பரீட்சை எழுத விடமாட்டேன் எனக் கூறினார்.

அப்போது அதிபரும், ஆசிரியையும் பார்த்துக்கொண்டிருந்தனர். எதுவும் கூறவில்லை. அதனைவிட என்னிடம் கடிதம் ஒன்றை எழுதி வாங்கினார்கள். இவருக்கு வருத்தம் பரீட்சை எழுத முடியாது என எழுதி வாங்கிக்கொண்டார்கள்.

இவர் பாடசாலைக்கு வருவதும் குறைவு என்றார்கள். அவர் எழுதியும் பிரயோசனம் இல்லை. புலமைப்பரிசில் பரீட்சையும் முக்கியமில்லையாம்." ஏதாவது காரணத்தினால் இந்த சிறுவன் பரீட்சையில் சித்தியடையாமல் போகும் பட்சத்தில், அதனை பாடசாலைக்கு அவமரியாதையாக கருதி பாடசாலை அதிபர் இவ்வாறு செயற்பட்டிருக்கலாம் என பிரதேச ஊடகவியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 


மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், Luton, United Kingdom

09 Apr, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், நவாலி, Bottrop, Germany, London, United Kingdom

04 Apr, 2021
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முரசுமோட்டை, Brampton, Canada

08 Apr, 2026
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US