கோட்டை பிள்ளையார் கோவில் கட்டுமானத்திற்கு எதிராக முறைப்பாடு
திருகோணமலை, பிரட்ரிக் கோட்டை நுழைவாயிலில் அமைந்துள்ள பிள்ளையார் கோவிலில் சட்டவிரோத கட்டுமானப் பணிகள் முன்னெடுக்கப்படுவதாகத் தெரிவித்து, நேற்றைய தினம் (18) திருகோணமலை தலைமையக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளது.
இலஞ்ச ஊழல் எதிர்ப்பு குடிமக்கள் சக்தி இயக்கத்தின் சார்பில் அதன் தலைவர் ஜமுனி கமந்த துஷாரா இந்த முறைப்பாட்டினை நேரில் முன்னின்று பதிவு செய்துள்ளார்.
நீதிமன்ற உத்தரவின் பேரில்
முறைப்பாட்டைப் பதிவு செய்த பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த ஜமுனி கமந்த துஷாரா, அண்மையில் கரையோரத்தில் புத்தர் சிலை வைத்ததாகக் குறிப்பிட்டு 4 பௌத்த மதகுருக்கள் உள்ளிட்ட 9 பேர் கைது செய்யப்பட்டு, நீதிமன்ற உத்தரவின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

அவ்வாறிருக்கையில், இந்தக் கட்டுமானங்கள் குறித்து பொலிஸார் ஏன் பாராமுகமாக இருக்கின்றனர்.
சட்டம் என்பது அனைவருக்கும் சமமானதாக இருக்க வேண்டும். ஒரு தரப்பினருக்கு எதிராகக் கடுமையாகச் செயற்படும் சட்டம், மறுபுறம் இவ்வாறான சட்டவிரோத கட்டுமானங்கள் நடைபெறும் போது அமைதி காப்பது ஏன்?
இந்த விவகாரம் தொடர்பாக இன்று(திங்கட்கிழமை) தொல்லியல் திணைக்களம் மற்றும் கரையோர வளங்கள் பாதுகாப்பு திணைக்களம் ஆகியவற்றிலும் உத்தியோகபூர்வமாக முறையிடவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
இந்த விவகாரம் தொடர்பில் திருகோணமலை தலைமையக பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
சோமாலிலாந்தை இஸ்ரேல் அங்கீகரித்தது ஏன்? 5 நாட்கள் முன்
நிலாவுக்கு விவாகரத்து தரும் சோழன்.. அதிர்ச்சியில் நிலா.. அய்யனார் துணை சீரியலில் அடுத்து நடக்கப்போவது Cineulagam
இரவில் உக்ரைன் மீது படையெடுத்த 200க்கும் மேற்பட்ட ரஷ்ய ட்ரோன்கள்: சுட்டு வீழ்த்த போராடிய வீரர்கள் News Lankasri
அமெரிக்காவால் வெனிசுலாவுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி: கச்சா எண்ணெய் ஏற்றுமதி 75% வீழ்ச்சி News Lankasri