திருத்திக் கொள்ளாவிட்டால்... இலங்கைக்கு எதிராக ஐ.நாவிடம் முறைப்பாடு செய்யப்படும்: சீன நிறுவனம் எச்சரிக்கை
இலங்கை கமத்தொழில் அமைச்சின் சர்ச்சையில் சிக்கியிருக்கும் சீனாவின் Qingdao Seawin Biotech Group என்ற பசளை நிறுவனத்தின் நற்பெயருக்கு பாதிப்பை ஏற்படுத்தி, இலங்கை தேசிய தாவர தனிமைப்படுத்த சேவை வெளியிட்டுள்ள பசளை தொடர்பான அறிக்கையை திருத்திக்கொள்ளவில்லை என்றால், இலங்கைக்கு எதிராக ஐக்கிய நாடுகளின் (FAO) உணவு மற்றும் கமத்தொழில் அமைப்பிடம் முறைப்பாடு செய்ய போவதாக எச்சரித்துள்ளது.
இந்த விடயம் தற்போது நீதிமன்றத்தில் உள்ளதுடன் சீன நிறுவனத்திற்கு எதிராக வெளியிடப்பட்டுள்ள இடைக்கால தடையுத்தரவு சம்பந்தமான வழக்கின் போது நீதிமன்றம் ஆராய்வதற்காக சீன நிறுவனம் தேவையான ஆவணங்களை சாட்சியங்களாக முன்வைத்துள்ளது.
இதனை சீன நிறுவனத்தின் சட்டத்தரணிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
Qingdao Seawin Biotech நிறுவனம் உற்பத்தி செய்யும் சேதனப் பசளைகள அமெரிக்கா, பிரித்தானியா, அவுஸ்திரேலியா, இத்தாலி உட்பட 56 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுவதாக அந்த நிறுவனத்தின் பிரதி முகாமையாளரும் பிரதான தொழிற்நுட்ப அதிகாரியுமான Anna Song கூறியுள்ளார்.

கழுத்தில் தாலி ஏறிவுடன் மொத்தமாக மாறிய சீதா.. வாழ்க்கை இழந்த மீனா- பரிதவிப்பில் குடும்பத்தினர் Manithan

மூன்றாம் உலகப்போர் வெடித்தால்... பிரான்சுடன் அணு ஆயுத ஒப்பந்தம் செய்துகொள்ளும் பிரித்தானியா News Lankasri

ஏமன் நாட்டில் மரண தண்டனைக்காக காத்திருக்கும் கேரள செவிலியர்: இந்திய உச்சநீதிமன்றத்தின் முடிவு News Lankasri

SBI Special FD திட்டத்தில் ரூ.1 லட்சம் முதலீடு செய்தால்.., 3 ஆண்டுகளில் திரும்ப கிடைக்கும் தொகை எவ்வளவு? News Lankasri
