பாசிக்குடா விடுதியில் ஹிஸ்புல்லாவின் இரகசிய சந்திப்பு! வியாழேந்திரனின் முறைப்பாட்டின் நிலை..
ஓட்டமாவடி காளி கோவில் இருந்த பிரதேசத்தில் மீன் சந்தை அமைந்தமை தொடர்பாக முன்னாள் இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன், நாடாளுமன்ற உறுப்பினர் ஹிஸ்புல்லாவுக்கு எதிராக முறைப்பாடொன்றை செய்திருந்தார்.
ஆனால், இந்த முறைப்பாடு தொடர்பான எந்தவொரு விசாரணையும் நடைபெறவில்லை என்ற தரவு, பொலிஸ் நிலையத்திலுள்ள கோப்புகளில் இருந்து கிடைக்கப்பெற்றுள்ளது.
இதேவேளை, ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் நடந்த பின்னர், ஒட்டுமொத்த இலங்கையும் ஊரடங்கு சட்டத்தில் முடங்கியிருந்த போது, நாடாளுமன்ற உறுப்பினர் ஹிஸ்புல்லா, பாசிக்குடா விடுதியில் தங்கியிருந்த 3 அரேபியர்களை நாட்டை விட்டு வெளியேற்றியிருந்தார்.
குறித்த 3 அரேபியர்களில் ஒருவர், விசா இன்றி தங்கியிருந்ததாகவும் அப்போது வியாழேந்திரனால் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டிருந்தது.
இவ்வாறிருக்க, தற்போது ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் தொடர்பான விசாரணைகள் தீவிரமடைந்துள்ள நிலையில், பிள்ளையான் பல முக்கிய விடயங்களை கூறியிருப்பதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இவை தொடர்பாக விரிவாக ஆராய்கின்றது எமது செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |




