வட மாகாண விளையாட்டு போட்டிகள்: மைதானங்கள் தொடர்பில் மாணவர்கள் குற்றச்சாட்டு
வட மாகாண பாடசாலைகளுக்கு இடையிலான விளையாட்டு போட்டிகள் நடைபெற்று வரும் பருத்தித்துறை பகுதியில் உள்ள தனியார் மைதானங்களில் அடிப்படை வசதி இன்றி காணப்படுவதாக மாணவர்கள் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர்.
வடமாகாண கல்வி அமைச்சுக்குட்பட்ட பாடசாலைகளுக்கிடையிலான மாகாண மட்ட போட்டிகள் நேற்றைய தினம் (07.08.2023) பருத்தித்துறை பகுதியில் உள்ள நான்கு மைதானத்தில் நடைபெற்றுள்ளது.
இதில் சில தனியார் மைதானங்கள் அடிப்படை வசதிகளின்றி காணப்படுவதாக விளையாட்டுக்களில் கலந்து கொண்ட மாணவர்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
அடிப்படை வசதிகள்
இது குறித்து மேலும் தெரியவருவதாவது, வடமாகாண ரீதியிலான பாடசாலைகளுக்கு இடையிலான மாகாண கால்பந்தாட்டம் உட்பட சில விளையாட்டுப் போட்டிகள் பருத்தித்துறைப் பகுதியிலுள்ள தனியார் விளையாட்டு மைதானங்களில் நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.
இதில் பங்கு கொள்வதற்காக வடக்கிலுள்ள ஐந்து மாவட்டங்களிலும் இருந்து பாடசாலை மாணவ, மாணவிகள் சென்றுள்ளனர்.
இதன்போது குறித்த தனியார் விளையாட்டு மைதானங்களில் மலசலக் கூடம், குடிநீர் போன்ற அடிப்படை வசதிகளின்றி காணப்பட்டதாகக் குற்றச்சாட்டியுள்ளனர்.
அதில் ஒரு தனியார் விளையாட்டு மைதானத்திற்கு அருகாமையில் கள்ளுத் தவறணை நிலையம் காணப்பட்டதுடன், குடிநீர் அயல் வீட்டில் இருந்தே மைதானத்திற்குக் கொண்டுவரப்பட்டமையும் கமராக்களில் பதிவாகியுள்ளது.
நடவடிக்கை எடுத்திருப்போம்
மன்னார், வவுனியா, முல்லைத்தீவு மற்றும் யாழ்ப்பாண தீவகப் பகுதிகளில் இருந்து வருகை தரும் மாணவர்கள் போட்டிக்காக பருத்தித்துறைக்கு செல்லும்போது பல்வேறு அசௌகரியங்களை எதிர்கொண்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
வெயிலும் வெப்பமும் நிறைந்த தற்போதைய சூழலில், வடமாகாண ரீதியில் இதனை ஒழுங்கமைக்கின்ற பொழுது போக்குவரத்து மற்றும் இதர வசதிகளைக் கருத்திற்கொள்ளாது அமைத்தமை குறித்து விசனம் வெளியிடப்பட்டது.
குறித்த விடயம் தொடர்பில் வடக்கு மாகாண விளையாட்டுத்துறை பணிப்பாளர் ராஜசீலனிடம் தொடர்பு கொண்டு வினவியபோது, வடமாகாண ரீதியான பாடசாலை மாணவர்களுக்கான போட்டியே இடம்பெற்று வருகின்றது.
அதன் அடிப்படையில் குறித்த பிரச்சினை தொடர்பில் எமக்கு அறிவிக்கப்பட்டிருந்தால் நாம் நடவடிக்கை எடுத்திருப்போம்.
மாணவர்கள் நீண்ட நாள் தங்குதல் மற்றும் அவர்களுடைய செலவுகளைக் கருத்திற்கொண்டு குறித்த நான்கு மைதானங்களையும் தயார்படுத்தியிருந்தோம்.
தனியார் மைதானங்கள்
பிரச்சினையான மைதானத்தை மாற்றி பிறிதொரு பாடசாலை மைதானத்திற்குப் போட்டிகளை மாற்ற ஏற்பாடு செய்துள்ளோம் என அவர் மேலும் தெரிவித்தார்.
இதனை யாழ்ப்பாணத்தில் வைத்திருந்தால் மாணவர்களுக்கு வசதி வாய்ப்புகள் இலகுவாக அமைந்திருக்கும் அல்லவா என வினவிய போது,
யாழ்ப்பாண நகரில் ஏற்பாடு செய்ய தங்குமிட வசதிகள் உட்பட்ட சில பிரச்சினைகள் காணப்பட்டமையினால் நகர்ப்பகுதியில் குறித்த விளையாட்டு நிகழ்வுகளை ஏற்பாடு செய்யமுடியவில்லை.
தற்பொழுது குறித்த விடயங்கள் சுட்டிக்காட்டப்பட்ட நிலையில் தனியார் மைதானத்தில் நடைபெறப் போட்டிகள் நெல்லியடி மத்திய கல்லூரிக்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |





யாழ்ப்பாணமே நீ குடிப்பது நல்ல தண்ணியா 1 மணி நேரம் முன்

அண்ணா சீரியலில் நடிக்க ஒரு நாளைக்கு மிர்ச்சி செந்தில் வாங்கும் சம்பளம்.. எவ்வளவு தெரியுமா Cineulagam
