ஜனாதிபதி பிறப்பித்துள்ள அவசர பணிப்புரை
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக சேதமடைந்த குடியிருப்புகளுக்கு நட்டஈடு வழங்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார்.
தேசியப் பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும், ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க இதனைத் தெரிவித்துள்ளார்.
சேதமடைந்த குடியிருப்புகளை புனரமைப்பதற்கான நடவடிக்கைகளை விரைவில் மேற்கொள்ள வேண்டும் எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு குறிப்பிட்டுள்ளது.

மாவட்டச் செயலாளர்களுக்கான அறிவுறுத்தல்
அத்துடன் பகுதியளவில் சேதமடைந்த குடியிருப்புகளுக்கும் நட்டஈட்டினை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட வீடுகள் தொடர்பில் முறையான அறிக்கைகளைச் சமர்ப்பிக்குமாறும் உரிய மாவட்டச் செயலாளர்களுக்கு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
போதைப்பழக்கத்தில் சிக்கிய கேப்டன்: இனி அணியில் எடுக்க மாட்டோம்..கிரிக்கெட் வாரியம் திட்டவட்டம் News Lankasri
19 நாள் முடிவில் துருவ் விக்ரமின் பைசன் காளமாடன் படம் செய்துள்ள மொத்த வசூல்... எவ்வளவு தெரியுமா? Cineulagam
முத்துவிடமே நேரடியாக சிக்கப்போகும் ரோஹினி, எப்படி தெரியுமா?.. சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam