கட்டாரில் உள்ள இலங்கைத் தூதரகம் வழங்கிய இழப்பீடு
கடந்த ஜனவரி முதல் ஜூன் வரை, டோஹாவில் உள்ள இலங்கைத் தூதரகம், கட்டாரில் உயிரிழந்த இலங்கைப் பிரஜைகளின் நெருங்கிய உறவினர்களுக்கு மொத்தம் ரூ. 83.16 மில்லியன் இழப்பீட்டை பெற்றுக்கொடுத்துள்ளது.
இந்தத் தொகையில், ரூ. 23.39 மில்லியன் தூதரகத்தின் முயற்சிகள் மூலம் நேரடியாக நெருங்கிய உறவினர்களுக்கு வழங்கப்பட்ட அதேநேரம் ரூ. 59.8 மில்லியன் கொழும்பில் உள்ள வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சுக்கு மேலும் விநியோகிப்பதற்காக மாற்றப்பட்டது.
வழங்கப்பட்ட இழப்பீட்டில் 2023ஆம் ஆண்டு முதல் நிலுவையில் உள்ள தொகைகளும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இழப்பீடு
தூதுவர் சித்தாரா கான் மற்றும் அமைச்சர் ஆலோசகர் தர்மசிறி விஜேவர்தன ஆகியோர் கட்டார் நிறுவனங்கள், தூதரக விவகாரப் பிரிவு, கட்டார் அரசாங்கம் மற்றும் சட்டப் பங்காளிகளுடன் இணைந்து இழப்பீட்டு பெற்றுக் கொடுத்துள்ளனர்.
2024ஆம் ஆண்டில், உயிரிழந்த இலங்கைப் பிரஜைகளின் குடும்பங்களுக்கு ரூ. 172.99 மில்லியன் இழப்பீடும் வழங்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 2 நாட்கள் முன்

அமெரிக்காவில் தோசையால் புகழ்பெற்ற இலங்கை தமிழர்! கனடா, ஜப்பானிலும் ரசிகர்கள்..யார் அவர்? News Lankasri

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட குழந்தை உயிரிழப்பு: உடலை பரிசோதித்த பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி News Lankasri

புலம்பெயர்ந்தோர் விவகாரம்... சில நாடுகளின் விசா அனுமதியை ரத்து செய்யவிருக்கும் பிரித்தானியா News Lankasri
