யாழில் பாவனைக்கு உதவாத சத்துமாவினை வழங்கிய தொண்டு நிறுவனம்!
யாழ்ப்பாணம் - உரும்பிராய் பகுதியில் சிறார்களுக்கு பாவனைக்கு உதவாத சத்துமா வழங்கப்பட்ட சம்பவமொன்று பதிவாகியுள்ளது.
இந்த சத்துமாவானது யாழ்ப்பாணத்தில் உள்ள தொண்டு நிறுவனம் ஒன்றினால் வழங்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், நேற்றையதினம் யாழ்ப்பாணம் - உரும்பிராய் பகுதியில் 20 சிறார்களுக்கு சத்துமா வழங்கப்பட்டது.
முறைப்பாடு
இதன்போது, அந்த சத்துமாவினை பரிசோதித்த ஒருவர் அது தரமற்ற சத்துமா என சந்தேகமடைந்த நிலையில் அதனை அரிதட்டின் மூலம் அடித்தபோது அதில் இருந்த புழுக்கள் தென்பட்டன.
இந்நிலையில் சிறார்களிடமிருந்து அனைத்து சத்துமா பைகளையும் பெற்றுக்கொண்ட குறித்த நபர் அதனை ஊரில் உள்ள பொது மண்டபம் ஒன்றில் வைத்தார்.

இதனை அறிந்த குறித்த தொண்டு நிறுவனத்தினர் அவருடன் முரண்பட்ட பின்னர் அந்த சத்துமா பொதிகளை எடுத்துச் சென்றதாக தெரிவிக்கப்படுகிறது.
இது குறித்து பொது சுகாதார பரிசோதகர் மற்றும் கிராம சேவகரிடம் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டதாக குறித்த நபர் தெரிவித்துள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



19 நாள் முடிவில் துருவ் விக்ரமின் பைசன் காளமாடன் படம் செய்துள்ள மொத்த வசூல்... எவ்வளவு தெரியுமா? Cineulagam
மீனாவிற்கு ஷாக் கொடுத்த செந்தில் என்ன செய்யப்போகிறார், பெரிய சிக்கலில் மயில்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 எபிசோட் Cineulagam
ட்ரம்ப் - சவுதி மெகா ஒப்பந்தம்... தூக்கம் தொலைத்த இஸ்ரேல்: ஆபத்தான போர் விமானங்கள் விற்பனை News Lankasri
அன்புக்கரசிற்கு பார்கவி கொடுத்த தரமான பதிலடி, கரிகாலனின் கிரிமினல் பிளான்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam