வாக்களிக்க விடுமுறை வழங்காத நிறுவனங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
இன்று நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலில் வாக்களிக்கச் செல்ல விடுமுறை வழங்காத நிறுவனத்தின் பிரதானிக்கு ஒரு மாத காலம் சிறைத்தண்டனை விதிக்கப்படலாம் என பெப்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ராேஹன ஹெட்டியாரச்சி தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத் தேர்தலில் வாக்களிக்க விடுமுறை வழங்குவதில்லை என்ற முறைப்பாடு
தொடர்பில் கருத்து தெரிவிக்கையிலே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், "இன்று இடம்பெறும் நாடாளுமன்றத் தேர்தலில் வாக்களிக்கச் செல்வதற்கு விடுமுறை வழங்குவதில்லை என்ற முறைப்பாடு எமக்குக் கிடைத்திருக்கின்றது.
சிறைத்தண்டனை
அவ்வாறு எந்த நிறுவனமாவது, தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளதன் பிரகாரம், வாக்களிக்கச் செல்ல இருக்கும் தூரத்துக்கு அமைய விடுமுறை வழங்காவிட்டால், நிறுவனத்தின் பிரதானிக்கு ஒரு மாத காலம் சிறைத்தண்டனை விதிக்கப்படலாம் அல்லது ஒரு இலட்சம் ரூபா தண்டம் விதிக்கப்படலாம்.
சில சந்தர்ப்பங்களில் இரண்டும் விதிக்கப்படலாம். அதனால் மக்களின் அடிப்படை உரிமையைப் பாதுகாக்க அனைவரும் கடமைப்பட்டுள்ளனர் என்றார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

செம்மணி மனித புதைகுழிக்கு நீதி கிடைக்குமா! 14 மணி நேரம் முன்

பாகிஸ்தானுக்கு பெரும் பின்னடைவு... செயல்பாடுகளை நிறுத்தும் பெரும் தொழில்நுட்ப நிறுவனம் News Lankasri

விராட் கோலியுடன் தொடர்பு.., ஒரு காலத்தில் பலூன்களை விற்று, ரூ.61,000 கோடி மதிப்புள்ள நிறுவனத்தை உருவாக்கியவர் யார்? News Lankasri

புள்ள இறந்ததுக்காக எவனாவது பெருமைப்படுவானா? எந்த பொண்ணுக்கும்.. கண்ணீருடன் பேசிய ரிதன்யாவின் தந்தை News Lankasri
