வட்டுவாகல் பாலத்தில் வீதி சமிஞ்சை இன்மையால் பயணிகள் அவதி(Video)
முல்லைத்தீவு வட்டுவாகல் பாலத்தில் பயணம் செய்பவர்கள் பாலத்திற்கு அருகாமை வீதி சமிஞ்சை இல்லாததால் போக்குவரத்தில் பெரும் சிரமத்தினை எதிர் கொள்கின்றார்கள்.
பரந்தன் _ முல்லைத்தீவு செல்லும் குறித்த வீதியில் வட்டுவாகலில் அமைந்துள்ள பாலத்தில் வீதி சமிஞ்சை இல்லாததனால் போக்குவரத்தில் ஈடுபடும் மக்கள் பெரும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.
குறித்த வீதியில் அமைந்துள்ள பாலத்தில் போக்குவரத்தில் பெரிய வாகனம் ஒன்றே பயணம் செய்ய முடியும். ஏனைய வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டு பயணம் செய்யும் வாகனம் வீதியை கடந்ததன் பின்னரே பயணம் செய்ய முடியும்.
அவ்வாறு வாகனம் வருவதனை அவதானிக்காது சென்றால் மீண்டும் ஒரு வாகனம் பின்னோக்கி சென்றதன் பின்னரே பயணிக்க முடியும்.
சாரதிகள் விசனம்
இவ்வாறாகவே குறித்த பாலத்தில் பயணம் செய்ய
வேண்டிய துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டுள்ளதாக சாரதிகள் விசனம் தெரிவித்துள்ளனர்.
மேலும் குறித்த பாலத்தில் வீதியின் இரு பக்கங்களிலும் சமிஞ்சை விளக்குகள் அமைக்காததனால் வாகன சாரதிகள் பெரும் இடர்களை எதிர்கொள்வதாகவும் குறித்த பாலத்தின் இரு பகுதிகளிலும் வீதி சமிஞ்சைகளை அமைத்து தருமாறும் கோரியுள்ளனர்.
குறித்த பாலமானது இதுவரை எந்தவித புனரமைப்புக்களுமின்றி மிக மோசமாக சேதமடைந்து காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |








ஷார்ஜாவில் தூக்கில் தொங்கி இறந்த கேரள பெண்: இந்தியா திரும்பிய கணவர் விமான நிலையத்தில் கைது News Lankasri

உடல் உறையும் நிலையில் லொறிக்குள் சிக்கியிருந்த புலம்பெயர்ந்தோர்... சாரதியால் அம்பலமான கொடூரம் News Lankasri

விக்ரம் ரோலக்ஸ் போல் கூலி படத்தில் சர்ப்ரைஸ் ஹீரோ கேமியோ.. மிரட்ட வரும் முன்னணி நடிகர்? யார் தெரியுமா Cineulagam
