பேருந்துக்குள் நடந்த பரபரப்பு - பெண் மீது கத்திக்குத்து
குருணாகல் கல்கமுவவில் இருந்து எம்போகம நோக்கி சென்று கொண்டிருந்த தனியார் பேருந்தில் பெண் ஒருவர் கத்தியால் குத்தப்பட்டுள்ளார்.
கல்லேவ பிரதேசத்தில் வைத்து நடத்தப்பட்ட கத்திக்குத்து தாக்குதலில் படுகாயமடைந்த பெண் அத்தேடுவெவ பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக கல்கமுவ ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
கல்லாவ பகுதியில் பேருந்தை நிறுத்திவிட்டு பேருந்தில் ஏறிய நபர் பெண்ணை கத்தியால் தாக்கியுள்ளார்.
குசுமாவதி என்ற 51 வயதான இரண்டு பிள்ளைகளின் தாயே இவ்வாறு கத்திக்குத்துக்குள்ளாகியுள்ளார்.
தாக்குதலை மேற்கொண்ட நபர் உலகம, கல்லாவ பகுதியைச் சேர்ந்தவர் எனவும் அவர் 60 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மூன்று வருடங்களாக உறவில் இருந்த இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரியவந்துள்ளது.
குறித்த நபரிடம் இருந்து குறித்த பெண் நான்கு லட்சம் ரூபாவை ஏமாற்றிச் சென்றுள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
தாக்குதலால் பெண்ணின் கழுத்து பகுதி மற்றும் காது பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
தாக்குதலை நடத்திய நபர் பொலிஸாரின் பாதுகாப்பில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 5 நாட்கள் முன்

15 வயதுக்கு கீழ் உள்ள பிள்ளைகள் சமூக ஊடகங்கள் பயன்படுத்த தடை: பிரான்ஸ் ஆணையம் பரிந்துரை News Lankasri
