இலங்கையிலும் நடைமுறைக்கு வந்துள்ள பொதுநலவாய நீதிமன்ற தீர்ப்புகள்!
இந்த வாரம் முதல் ஐக்கிய இராச்சியம், அவுஸ்திரேலியா, இந்தியா மற்றும் கனடா உள்ளிட்ட 53 பொதுநலவாய நாடுகளின், நீதிமன்ற தீர்ப்புகளின் பரஸ்பர அங்கீகாரம், பதிவு மற்றும் அமுலாக்கம் இலங்கையிலும் செயற்பாட்டுக்கு வருகின்றன.
அதன்படி, 2025 மார்ச் 26 ஆம் திகதி, நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார ஒரு வர்த்தமானி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
முன்னதாக, இலங்கை 2024 இல் வெளிநாட்டு தீர்ப்புகளின் பரஸ்பர அங்கீகாரம், பதிவு மற்றும் அமுலாக்கச் சட்டத்தை நிறைவேற்றியது.
நீதிமன்றங்களின் தீர்ப்பு
மற்ற நாடுகளின் உள்ள நீதிமன்றங்களின் தீர்ப்புகளின் பரஸ்பர அங்கீகாரம், பதிவு மற்றும் அமுலாக்கத்தை, இலங்கையில் முன்னெடுப்பதை, இந்தச் சட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்த புதிய சட்டம், பல தசாப்தங்களாக செயல்பாட்டில் உள்ள முந்தைய தொடர்புடைய கட்டளைகளை ரத்து செய்தது.
வெளிநாட்டில் வழங்கப்படும் விவாகரத்து உத்தரவை இலங்கையில் செயல்படுத்துவது குறித்து உத்தரவிடக் கோரிய மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் தீர்ப்பைத் தொடர்ந்து, இந்தச் சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.

டொனால்ட் டிரம்ப் நிர்வாகத்தால் வெளியிடப்பட்ட ஆவணம்! முற்றிலுமாக நிறுத்தபட்ட இலங்கைக்கான உதவி திட்டம்
இந்த வாரம் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவிப்பின் கீழ் உள்ள மற்ற நாடுகளில் பங்களாதேஷ், பாகிஸ்தான், மாலைத்தீவுகள், சைப்ரஸ், கென்யா, மலேசியா, தென்னாப்பிரிக்கா, சிங்கப்பூர் மற்றும் சிம்பாப்வே ஆகியவையும் அடங்குகின்றன.