இலங்கையின் கடன் தொடர்பில் பொதுக் கட்டமைப்பு: சர்வதேச நாணய நிதியம்
இலங்கையின் கடன் தொடர்பில் பொதுவான கட்டமைப்பின் கீழ் உரிய நேரத்தில் ஒழுங்கான செயல்முறைகளுக்கு சர்வதேச நாணய நிதியம் அழைப்பு விடுத்துள்ளது.
இந்தியா பெங்களூரில் நேற்று (25.02.2023) முடிவடைந்த ஜி20 நிதி அமைச்சர்கள் மற்றும் மத்திய வங்கி ஆளுநர்கள் கூட்டத்தின் இறுதியில், இது தொடர்பான அறிக்கையை சர்வதேச நாணய நிதியத்தின் முகாமை பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜொர்ஜீவா விடுத்துள்ளார்.
கடன் கட்டமைப்பை வலுப்படுத்தவும், கடனைத் தீர்க்கும் வேகம் மற்றும் செயல்திறனை மேம்படுத்தவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று அவர் தமது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

சர்வதேச சமூகம் ஒன்றுபட வேண்டும்
பல நாடுகளில் தொற்றுநோய்க்கு முன்னரே கடன் பாதிப்புக்கள் உயர்ந்த நிலையில் இருந்தன.
இந்த நிலையில் இறையாண்மைக் கடன் பாதிப்புகள், கொரோனா மற்றும் யுக்ரைனுக்கு எதிரான ரஷ்யாவின் போரிலிருந்து உருவாகும் அதிர்ச்சிகளால் இந்த நிலைமைகள் மேலும் மோசமடைந்துள்ளன என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனவே, உலகளாவிய குடும்பத்தின் மிகவும் பாதிக்கப்படக் கூடிய உறுப்பினர்களுக்கான
தீர்வுகளைக் கண்டறிய சர்வதேச சமூகம் ஒன்றுபட வேண்டிய பொறுப்பு உள்ளது என்றும்
அவர் தெரிவித்துள்ளார்.
டித்வா புயலின் பின் முக்கியத்துவம் பெறப்போகும் பலாலி விமான நிலையம் 9 மணி நேரம் முன்
கடை திறப்பு விழா முடிந்தது, அடுத்து தர்ஷன் கிளப்பிய பிரச்சனை, குணசேகரன் அடுத்த பிளான்... எதிர்நீச்சல் தொடர்கிறது Cineulagam
விரைவில் முடிவுக்கு வரும் பூங்காற்று திரும்புமா சீரியலின் கிளைமேக்ஸ் காட்சியின் போட்டோஸ்... Cineulagam
Bigg Boss: உன்னை மாதிரி பொறுக்கித்தனமா பண்றேன்? தைரியம் இருந்தால் துப்புடா! காருக்குள் சண்டை Manithan
பிரித்தானியாவில் கொல்லப்பட்ட இந்திய இளம்பெண் வழக்கு: அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள புதிய தகவல்கள் News Lankasri