அடுத்தவாரம் குறையவுள்ள பொருட்களின் விலைகள்: வெளியான அரசாங்க தகவல்-செய்திகளின் தொகுப்பு
பொருளாதார நெருக்கடி காரணமாக அதிகரித்த சிமெந்து, கம்பி மற்றும் இரும்பு ஆகியவற்றின் விலைகளை குறைப்பதற்கு உடனடி நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.
வர்த்தக மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அமைச்சர் நளின் பெர்னாண்டோ இதனைத் தெரிவித்துள்ளார்.
அத்துடன் கோழி இறைச்சி மற்றும் மீனின் விலை குறைப்பு தொடர்பில் அடுத்த வாரம் தீர்மானம் எடுக்கப்படவுள்ளது.
சந்தையில் கோழி இறைச்சியின் விலை தொடர்பான தரவுகள் நுகர்வோர் விவகார அதிகார சபையிடம் இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை அண்மையில் முட்டையின் விலைக்கு அரசாங்கம் விலை நிர்ணயம் செய்த போதிலும், சந்தையில் போதியளவு முட்டை விற்பனைக்கு இல்லை என மக்கள் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகின்றது இன்றை காலைநேர செய்திகளின் தொகுப்பு,