தேர்தல் சட்டங்களில் மாற்றங்களை அடையாளம் காணும் குழுவொன்றை நியமிக்க தீர்மானம்
தேர்தல் சட்டங்கள் மற்றும் தேர்தல் முறைமைகளில் பொருத்தமான மாற்றங்களை அடையாளம் காணவும், தேவையான திருத்தங்களை பரிந்துரைக்கவும் ஒரு தேர்வுக் குழுவை நியமிப்பதற்கான தீர்மானத்தை நாடாளுமன்ற அவைத் தலைவர் தினேஷ் குணவர்தன முன்வைத்துள்ளார்.
இந்த யோசனையின் படி குழுவின் தலைவர் மற்றும் குழுவின் உறுப்பினர்கள் சபாநாயகரால் நியமிக்கப்படுவார்கள். அதே நேரத்தில் குழு அதன் முதல் ஆறு மாதங்களுக்குள் அல்லது நாடாளுமன்றம் வழங்கக்கூடிய நீண்ட காலத்திற்குள் சபைக்கு தமது அறிக்கை சமர்ப்பிக்கும்.
குழு எந்தவொருவரையும் வரவழைத்து ஆலோசனைகளை பெறலாம். நிபுணர்களின் சேவைகளைப் பெறலாம் மற்றும் சம்பந்தப்பட்ட துறைகளில் வல்லுநர்கள் மற்றும் அவ்வப்போது இடைக்கால அறிக்கைகளை வெளியிடவும் குழுவுக்கு அதிகாரம் உள்ளது.
அதேநேரம் எதிர்க்கட்சியின் திட்டங்களும் வரவேற்கப்படும் என்றும் அவைத்தலைவர் தினேஸ் குணவர்தன தெரிவித்துள்ளார்.