ஐக்கிய நாடுகள் சபையின் குழுவினருக்கும், யாழ். மாநகரசபை முதல்வருக்கும் இடையில் சந்திப்பு (Photo)
ஐக்கிய நாடுகள் சபையின் குழுவினருக்கும், யாழ். மாநகரசபை முதல்வர் வி.மணிவண்ணனுக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
யாழ். மாநகரசபை அலுவலகத்தில் நேற்று (18.11.2022) இந்த சந்திப்பு நடத்தப்பட்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையின் அரசியல் மற்றும் சமாதானத்தை கட்டியெழுப்பும் விவகாரங்கள் திணைக்கள ஆசிய பசுபிக் பிரிவுக்கான பணிப்பாளர் பீற்றர் டியு, அரசியல் விவகார அதிகாரி அல்மா சாலியு, ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி ஹனா சிங்கர் ஆகியோர் அடங்கிய குழுவினரே யாழ்ப்பாண மாநகர சபைக்கு விஜயம் செய்துள்ளனர்.
நினைவுச்சின்னம் வழங்கல்
இந்த சந்திப்பின் நிறைவில் ஐக்கிய நாடுகள் சபையின் குழுவினருக்கு நினைவுச் சின்னமொன்றும் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
மேலும் ஐக்கிய நாடுகள் சபையின் குழுவினர் பல்வேறு தரப்புகளையும் சந்தித்து கலந்துரையாடவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
வடக்கு ஆளுநரை சந்தித்த ஐ.நா பிரதிநிதிகள்
இதேவேளை யாழ்ப்பாணம் விஜயம் மேற்கொண்ட ஐ.நாவுக்கான சிறப்பு அதிகாரிகள் குழு வட மாகாண ஆளுநரைச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர்.
இதன் போது எதிர்கால வடக்கு அபிவிருத்தி தொடர்பில் கலந்துரையாடல் மேற்கொள்ளப்பட்டதுடன் வடக்கு அபிவிருத்திக்கு தமது தொடர்ச்சியான பங்களிப்பு இருக்கும் என ஐ.நா நிறுவனப் பிரதிநிதிகள் ஆளுநருக்கு தெரிவித்துள்ளனர்.
குறித்த சந்திப்பில் ஐ.நாவின் ஆசிய பசுபிக் பிராந்திய அரசியல்
விவகாரங்களுக்கான தலைமை அதிகாரி பீட்டர் நிக்கோலஸ் டியு, மற்றும் இலங்கைக்கான
ஐ.நா பதிவிட பிரதிநிதி ஹான சிங்கர் மற்றும் ஐக்கிய நாடுகள் நிறுவன அதிகாரிகள்
எனப் பலரும் கலந்துக்கொண்டுள்ளனர்.

உக்ரைன் உடைந்து சின்னாபின்னமாகும்... இந்த இரண்டு நாடுகளும் உலகை ஆளும்: எச்சரிக்கும் வாழும் நோஸ்ட்ராடாமஸ் News Lankasri
