ரணிலின் ஆட்சியில் ஸ்தாபிக்கப்படவுள்ள ஆணைக்குழுக்கள்
தேசிய காணி ஆணைக்குழு மற்றும் உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு ஆகியவை தமது அரசாங்கத்தின் கீழ் ஸ்தாபிக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உறுதியளித்துள்ளார்.
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பிரச்சினைக்கு அடுத்த ஐந்து வருடங்களுக்குள் தீர்வு காண்பதற்கு நீதியரசர் நவாஸ் ஆணைக்குழுவின் ஊடாக செயற்பாடுகள் மேற்கொள்ளப்படும் என இன்று (14.09.2024) யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
வடக்கின் பிரச்சினைகளை அரசியல் பிரச்சினைகளுக்கு மாத்திரம் மட்டுப்படுத்த முடியாது எனவும், அபிவிருத்தியும் தேவை எனவும் ஜனாதிபதி இதன்போது குறிப்பிட்டுள்ளார்.
பிரச்சினைகள்
இல்லையேல் ஏனைய மாகாணங்கள் அபிவிருத்தியில் முன்னோக்கி செல்லும் போது வடக்கு பின்தங்கிவிடும்.
எனவே, வடக்கின் அரசியல் பிரச்சினைகள் மட்டுமன்றி அபிவிருத்தி பிரச்சினைகளும் தீர்த்து வைக்கப்படும் எனவும் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |