அரசியல் வாதிகள் -அதிகாரிகள் 100 பேருக்கு வெளிநாட்டு பயணத் தடை
இலஞ்ச - ஊழல் எதிர்ப்புச் சட்டத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள அரசியல் வாதிகள் மற்றும் அரச அதிகாரிகள் 100 பேருக்கும் மேற்பட்டோருக்கு எதிராக வெளிநாட்டு பயணத் தடை பெறப்பட்டுள்ளதாக இலஞ்ச- ஊழல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
இலஞ்ச- ஊழல் சுமத்தப்பட்டுள்ளவர்களில் அடிக்கடி வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொள்ளும் நபர்களுக்கு எதிராகவே இலஞ்ச- ஊழல் எதிர்ப்புச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டிக்கும் சரத்துகளுக்கு அமையவே தடை போடப்பட்டுள்ளதாக இலஞ்ச- ஊழல் ஆணைக்குழுவின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
தடை விதிக்கப்பட்டுள்ள அதிகாரிகள்
பாரியளவிலான இலஞ்ச- ஊழல் தொடர்பில் கிடைபெற்றுள்ள முறைப்பாடுகள் தொடர்பில் விசாரணைகள் நடைபெறுவதோடு மேலும் சம்பந்தப்பட்ட சாட்சியாளர்களிடம் வாக்குமூலங்களும் பெறப்பட்டுள்ளன.

அவ்வாறான ஒரு சந்தர்ப்பத்தில் இலஞ்ச- ஊழல் சரத்துக்களின் கீழ் மூன்று மாதங்கள் வெளிநாட்டு பயணத் தடையை பெற்றுக் கொள்ளலாம்.அது தொடர்பில் குடியகல்வு மற்றும் குடிவரவு கட்டுப்பாட்டாளருக்கு குறித்த நபர் தொடர்பான விபரங்களை அனுப்பி தடைக்கான உத்தரவை பெற்றுக் கொள்ளப்படும் என தெரிவிக்கப்படுகிறது.
வானதியை திருமணம் செய்துகொள்ள தயங்கும் பாண்டியன்.. நிலா தான் காரணமா.. அய்யனார் துணை சீரியலில் அடுத்து நடக்கவிருப்பது இதுதான் Cineulagam
பிரித்தானியாவில் ஆண்டுக்கு 1 மில்லியன் பவுண்டுகள் சம்பாதிக்கும் ஒருவர் எவ்வளவு வரி செலுத்த வேண்டும்? News Lankasri