ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான ஆணைக்குழுவின் அறிக்கை முழுமையற்றது: வாசுதேவ
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகளை நடத்திய ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை முழுமையற்றது எனவும் அறிந்துக்கொள்ள வேண்டிய பிரதான விடயங்கள் ஆணைக்குழு கண்டறியவில்லை எனவும் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் வாசுதேவ இதனை கூறியுள்ளார்.
இது குறித்து யாரும் என்னிடம் கேட்கவில்லை. நீங்கள் தான் முதலில் கேட்கின்றீர்கள். இது முழுமையற்ற அறிக்கை. அறிந்துக்கொள்ள வேண்டிய பிரதான விடயங்கள் அதில் இல்லை.
ஈஸ்டர் தாக்குதலுடன் மிகப் பெரிய கலவரம் ஏற்படவிருந்தது.
இந்த கலவரம் ஏற்பட்டிருந்தால், நாட்டில் நடத்தப்படவிருந்த தேர்தலை நடத்தமால் தவிர்க்க இந்த சிவில் கலவரம் திட்டமிடப்பட்டிருந்ததா?. எம்.சீ.சீ உடன்படிக்கையில் கையெழுத்திட அது திட்டமிடப்பட்டிருந்ததா?. இந்த விடயங்கள் தொடர்பில் மேலும் விசாரிக்க வேண்டும்.
அப்படியில்லை என்றால், சஹ்ரானுக்கு ஏனையோருக்கும் தற்கொலை குண்டு தாக்குதல் நடத்தும் தேவை இருந்திருக்க வேண்டும். அவர்களின் தேவை அது மட்டுமே. நாட்டு கத்தோலிக்க சிங்கள மக்களுக்கும், முஸ்லிம் மக்களுக்கும் இடையில் பாரிய கலவரம் ஏற்பட்டு, அது எங்கு போய் முடியும் என்பது சஹ்ரானுக்கு தெரியாது.
சஹ்ரானுக்கு அது அவசியமும் இல்லை. ஆணைக்குழுவின் அறிக்கை முழுமையற்றது எனவும் வாசுதேவ நாணயக்கார குறிப்பிட்டுள்ளார்.
மனோஜிற்கு பெண் ரெடி, அண்ணாமலை கேட்ட கேள்வி, ஷாக்கான விஜயா... சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam
உலக நாடுகள் மீது டிரம்ப் விதித்த வரி விதிப்பு ரத்து: அமெரிக்க உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு News Lankasri