இது தோல்வியடைந்த அரசாங்கம்! கிளிநொச்சியில் சிறீதரன் தெரிவிப்பு

Srilanka Politics Kilinochchi Siritharan
By Sudaron Mar 02, 2022 12:40 PM GMT
Report

தமிழ், சிங்கள மக்களை வதைத்து அதன் ஊடாக தமது குடும்ப நலனை கொண்டிருக்கின்ற ஒரு அரசாங்கமாக தற்போதைய அரசாங்கம் உள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறீதரன் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சியில் அமைந்துள்ள அவரது அலுவலகத்தில் இன்று முற்பகல் ஊடகவியலாளர் சந்திப்பொன்று இடம்பெற்றிருந்தது.

இதில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார். 

இதன்போது அவர் மேலும் கூறுகையில்,

எரிபொருள் தட்டுப்பாடு என்பது இந்த அரசாங்கத்தின் இயலாமையையும், வலு குன்றிய நிலையையும், திட்டமிடப்படாத பொருளாதார சிந்தனைகளை கொண்ட, இராணுவ சிந்தனைகளோடு மட்டுமிருக்கின்ற இராணுவ தலைவராக இருந்த கோட்டபாயவின் தோற்றுப்போன மனநிலையையும் இந்த உலகில் காட்டி நிற்கின்றது. 

கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான மக்கள் விவசாயத்தையே பொருளாதாரமாகவும், ஜீவனோபாயமாகவும் கொண்டு செல்கின்றனர்.

அதிலும் குறிப்பாக வடக்கு, கிழக்கு மாகாணங்களில் நெற்செய்கை பெருமளவில் மேற்கொள்ளப்படுகின்றது. இவ்வாறு மேற்கொள்ளப்பட்ட காலபோக நெற்செய்கையினால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இயற்கை விவசாயத்திற்கு செல்லுங்கள் என ஒரே இரவிலேயே இந்த அரசாங்கம் அறிவித்ததன் காரணமாக இம்முறை அறுவடை மிகப்பெரும் பின்னடைவை சந்தித்திருக்கின்றது.

இதனால் ஏக்கருக்கு 50 மூடைகளை பெற்றுக் கொண்ட வயல் நிலங்களில் ஏக்கருக்கு 5, 7, 10 மூடைகளாகவே அறுவடை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதனை அடுத்து இயற்கை உரத்துடன் சிறுபோக செய்கையை மேற்கொள்வதற்கு உழுது தயாரான பொழுது இங்கு டீசல் எனும் எரிபொருள் தடையாக இருக்கின்றது.

அரசாங்கத்திடமிருந்து அவர்களிற்கான எரிபொருள் கிடைக்காத காரணத்தால் கிளிநொச்சியில் பல எரிபொருள் நிரப்பு நிலையங்களில் மக்கள் வரிசையில் நெறிவதை நாங்கள் பார்க்கின்றோம்.

இது அவர்களை பொறுத்தவரையில் பொருளாதாரத்தில் மற்றுமொரு அடியாக விழுந்திருக்கின்றது.

இவ்வாறான நிலையில் தாம் பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை வெளியிடுகின்றனர். இந்த அரசாங்கம் தோல்வியடைந்த அரசாங்கம்.

அவர்கள் தமிழ், சிங்கள மக்களை வதைத்து அதன் ஊடாக தமது குடும்ப நலனை கொண்டிருக்கின்ற ஒரு அரசாங்கமாக உள்ளது.

அந்தவகையில் இந்த அரசாங்கத்தின் செயற்பாடுகள், கோட்டபாயவின் நடவடிக்கைகள் தமது பொருளாதாரத்தில் பின்னடைவுகளை ஏற்படுத்தியுள்ளதாக விவசாயிகள் சோகமான கதைகளை சொல்கின்றார்கள்.

தனியார் ஊடாக உரத்தினை இறக்குமதி செய்ய அனுமதித்துள்ளதாக அரசாங்கம் சொல்கின்ற போதும், இங்கு தமிழ் மக்கள் உரத்தினை பெற்றுக் கொள்ளவோ அல்லது காணவோ முடியாத நிலையிலேயே உள்ளனர்.

ஆகவே இது மிகப்பெரிய பின்னடைவையும், இந்த மக்களிற்கு ஏமாற்றத்தையும் கொடுத்திருக்கின்றது.

சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கியுடன் தாங்கள் பேசிக்கொண்டிருப்பதாக நிதியமைச்சர் நேற்றைய தினம் தெரிவித்திருக்கின்றார்.

சர்வதேச நாணய நிதியத்துடன் நாங்கள் பேசமாட்டோம் என்று அவர்கள் பல தடவை கூறியிருக்கின்றார்கள். இப்பொழுது அந்த நிலைமைக்கு இறங்கி வந்திருப்பது கூட அவர்களது இயலாமையின் அடுத்தக்கட்ட வெளிப்பாட்டை கொண்டு வந்திருக்கின்றது என குறிப்பிட்டுள்ளார். 

மரண அறிவித்தல்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சில்லாலை, சுதந்திரபுரம்

30 Jul, 2025
மரண அறிவித்தல்

இலங்கை, Münster, Germany, கிளிநொச்சி

26 Jul, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, கொடிகாமம், வெள்ளவத்தை

26 Jul, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், கொழும்பு, Scarborough, Canada

27 Jul, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், இணுவில்

11 Aug, 2014
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

04 Aug, 2020
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கந்தர்மடம், அத்தியடி, Geilenkirchen, Germany

30 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, Scarborough, Canada

27 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் தெற்கு, Scarborough, Canada

30 Jul, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரவெட்டி, முல்லைத்தீவு, Toronto, Canada

29 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தும்பளை, பரிஸ், France

02 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒமந்தை, மருதங்குளம், திருநாவற்குளம்

30 Jul, 2022
13ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, மெல்போன், Australia

30 Jul, 2013
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொள்ளுப்பிட்டி

09 Aug, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Farnborough, United Kingdom

29 Jul, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Herzogenbuchsee, Switzerland

30 Jul, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், கொழும்பு

28 Jul, 2018
12ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

29 Jul, 2014
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூதூர், மட்டக்களப்பு

28 Jul, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சிட்னி, Australia

28 Jul, 2017
மரண அறிவித்தல்

இலந்தைக்காடு, யாழ்ப்பாணம், Hamburg, Germany

19 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, சூரிச், Switzerland

30 Jul, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US