வடக்கு, கிழக்கு விவசாயிகளுடைய பிரச்சினை இதுவரை தீர்க்கப்படவில்லை: த.சித்தார்த்தன் (Video)
வடக்கு, கிழக்கில் விவசாயிகளுக்கு உரம் தொடர்பில் இதுவரை சரியான முறையிலே தீர்வு கிடைக்கவில்லை என புளொட் தலைவர் த.சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் நேற்றுமுன்தினம் உறையாற்றுகையில் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
விவசாயிகள் இப்போது நெல்லு விதைக்க வேண்டிய காலம். அவர்கள் நெல்லை
விதைப்பதா விடுவதா என்று மிகவும் சிந்தித்துக் கொண்டுடிருக்கிறார்கள்.
இந்த நிலையில் உரம் கிடைக்குமா என்ற அச்சத்தில் உள்ளனர்.
ஆகவே வடக்கு, கிழக்கில் மழையும் பொய்த்துக்கொண்டு இருக்கின்றது. அதேநேரம் இந்த உரப்பிரச்சினைக்கும் விவசாயிகள் முகங்கொடுக்கின்றனர்.
இவ்வாறு பல பிரச்சினைகளுக்கு எங்களுடைய மக்கள் முகங்கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.
இன்று இந்த அரசாங்க உத்தியோகத்தர்களை அல்லது நிரந்தர வருமானத்தில் இருக்கக்கூடிய வெளி இடங்களிலும் வேலைசெய்யக்கூடிய உத்தியோகத்தர்களை எடுத்துக்கொண்டால் இந்தப் பிரச்சினைகள் வருவதற்கு முன்பு ஒரு நடுத்தட்டு வர்க்கமாக இருந்தவர்கள் என தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் இவர் தெரிவித்த முழுமையான கருத்துக்கள் இக் காணொளியில்





அரசாங்கத்திற்கு நெருக்கடியை கொடுத்துள்ள செம்மணி மனிதப் புதைகுழி! 12 மணி நேரம் முன்

தமிழகத்தில் டாப் டக்கர் வசூல் வேட்டை செய்துள்ள சிவகார்த்திகேயனின் மதராஸி.. மொத்த வசூல் விவரம் Cineulagam
