கல்முனை பிராந்தியத்தில் கோவிட் தடுப்பூசி வழங்கல் ஆரம்பம்
சாய்ந்தமருது, காரைதீவு, கல்முனை, நாவிதன்வெளி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் கோவிட் தடுப்பூசி ஏற்றும் பணி முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
இந்த நடவடிக்கை இன்று காலை 8.00 மணி தொடக்கம் இடம்பெற்று வருகின்றது.
பிரதேச மற்றும் ஆதார வைத்தியசாலைகளில் 60 வயதுக்கு மேற்பட்டோர், கர்ப்பிணி தாய்மார், பாலூட்டும் தாய்மார் எனப் பலருக்கும் தடுப்பூசி ஏற்றும் பணி சிறப்பாக அந்தந்த பிரதேச காதர வைத்திய அதிகாரிகளின் தலைமையில் சுகாதார உத்தியோகத்தர்கள், ஊழியர்களின் பங்களிப்புடன் இடம்பெற்று வருகின்றது.
மேலும் அரச அதிகாரிகள், மக்களுடன் நேரடி தொடர்பைக் கொண்டிருப்போர், உள்ளுராட்சி மன்றங்களின் உறுப்பினர்கள், உத்தியோகத்தர்கள், பிராந்திய ஊடகவியலாளர்கள், ஆசிரியர்கள், அதிபர்கள் எனப் பலருக்கும் பாடசாலைகள் மற்றும் ஒதுக்கப்பட்ட வள நிலையங்களில் தடுப்பூசிகள் வழங்கப்பட்டு வருகின்றன.
இதில் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஜி.சுகுணன் அவர்களும் கலந்து கொண்டு பார்வையிட்டு வருகிறார். மக்கள் உற்சாகத்துடன் தடுப்பூசிகளை ஏற்றிக்கொள்ள வருவதைக் காணக்கூடியதாக உள்ளது.




