தமிழ்தேசிய மெய்வல்லுனரின் நினைவேந்தல் அறிக்கை
தமிழ்த் தேசிய மெய்வல்லுனர், தேசப்பற்றாளர் கலாநிதி எதிர்வீரசிங்கத்திற்கு வீரவணக்கமும் நினைவுப் பகிர்வும் செலுத்தும் முகமாக ஊடக அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
குறித்த அறிக்கையானது, தமிழர் புனர்வாழ்வு கழகத்தினால் வெளியிடப்பட்டுள்ளது.
மேலும் இந்த அறிக்கையில்,
“02/03/2023 அன்று தேசப்பற்றாளர் கலாநிதி நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் யாழ்ப்பாணம் செல்லும் வழியில் வன்னியில் உள்ள கனகபுரம் துயிலும் இல்லத்திற்கும் சென்றிருந்தார்.
நிழல் ஒளிப்படம்
அங்கிருந்து எடுத்த நிழல் ஒளிப்படத்தினையும் பகிந்திருந்தார். கூடவே இந்தப்பயணம் என்னுடைய இறுதிப்பயணமாக இருக்கும் எனவும் கூறியிருந்தார். ஆம் அது உண்மையாகவே நடந்துவிட்டது.
அரசியல்துறைப் பொறுப்பாளர் பிரிகேடியர் தமிழ்ச்செல்வனின் இறுதிப்பயணத்தின் போது அங்கிருந்தவர். ஆகவே அந்த இடத்தினையும் ஏனைய மாவீர்கள் உறங்கும் இடத்தினையும் இறுதியாக பார்க்கவேண்டும் என்ற ஏக்கத்தில் தான் அங்கு சென்றதாக கூறியிருந்தார்” என குறிப்பிடப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |