சுவிற்சர்லாந்தில் உயர்நிலைப் பள்ளியில் பலரையும் திரும்பி பார்க்க வைத்த ஈழத்தமிழ் மாணவனின் செயல்
சுவிற்சர்லாந்தில் உயர்நிலைப் பள்ளிகள் «கிம்னாசியும்» என அறியப்படும் கல்லூரி ஆகும். கல்லூரிக்காலத்தை வெற்றிகரமாக முடித்தவுடன் பொது பல்கலைக்கழக நுழைவுத் தகுதி சான்றிதழை வழங்குகின்றன.
இது சுவிஸ் முழுவதும் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இந்த சுவிஸ் அளவிலான அங்கீகாரத்திற்கு சுவிற்சர்லாந்து நடுவனரசும், மாநில அரசுகளும் இணைந்து பொறுப்பாக உள்ளன. இக்கல்லூரிகளின் நோக்கம் பொது அறிவை ஆழப்படுத்துவதும், பல்கலைக்கழக நுழைவுத் தகுதியைப் பெறுவதும் ஆகும்.
சுவிற்சர்லாந்து நடுவனரசால் அங்கீகரிக்கப்பட்ட "மத்தூரா (Matura)" சான்றிதழ் பல்கலைக்கழகங்கள் மற்றும் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிகளில் நேரடியாகச் சேர்வதற்கு அனுமதிக்கிறது. «மத்தூரா» பாடத்திட்டங்களின் காலம் மாநிலத்திற்கு மாநிலம் மாறுபடுகிறது. சுவிஸ்சர்லாந்தின் மத்தூரா இறுதித் திட்ட வேலை சுருக்கமாக மத்துரா வேலை) என்பது பொதுவாக ஜிம்னாசியத்தின் இறுதியாண்டில் தயாரிக்கப்படும் ஒரு சுயாதீன எழுத்துத் திட்டமாகும்.\
மாணவர்களின் அறிவிய
இது மத்தூரா சான்றிதழின் முக்கிய அங்கமாகும் மற்றும் மாணவர்களின் அறிவியல் மற்றும் முறையான திறமைகளை வெளிப்படுத்த உதவுகிறது. இவ்வழியில் பேர்ன் மாநிலத்தில் அமைந்துள்ள நொய்பெல்ட் கிம்னாசியத்தில் சட்டம் மற்றும் பொருளாதாரத் துறையில் கல்லூரிக் கல்வியினை நிறைவு செய்யும் அம்பலன் முருகவேள் அவர்கள் தனது ஒப்படைப் பணிக்கு அனைவரையும் ஈர்த்த ஒரு தலைப்பாக «சமாதானத்தின் சாம்பல்» என்பதைத் தேர்வு செய்திருந்தார்.
"சமாதானத்தின் சாம்பல்" என்பது போர் முடிந்த பிறகு மக்கள் எவ்வாறு உணர்கிறார்கள் என்பதை நடனத்தின் மூலம் வெளிப்படுத்தும் ஒரு தனித்துவமான ஒப்படை முத்திரையாக மிளிர்ந்தது. போர் இழப்பையும் அதே வேளை பார்வையாளர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் தங்கள் பிரியமானவர்களையும், தாயகத்தையும் இழந்த போது அனுபவிக்கும் வலி, தனிமை மற்றும் இழப்பை உணர வைப்பதாக அமைந்தது.
பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒரு குரலை வழங்கி, அவர்களின் அனுபவங்களைப் புரிந்து கொள்ள உதவுவதே இதன் நோக்கம் என அம்பலன் குறிப்பிட்டார். இவர் குறித்த இலக்கை எட்டிவிட்டார் என்பதை கடந்த 11.12.2024 இவரது ஒப்படையினைக் கண்ணுற்ற அனைவரும் ஏற்றுக்கொண்டு கைதட்டி மதிப்பளித்து உறுதிப்படுத்தினர்.
இந்த படைப்பு மூன்று பகுதிகளாக பிரிக்கப்பட்டிருந்தது, இவற்றில் பல்வேறு உள(மன)நிலைகள் மற்றும் வாழ்க்கைக் கட்டங்களை வெளிப்படுத்தி இருந்தது. அடக்கம் 1: இது ஒரு வகுப்பறையில் நடைபெறுகிறது. இது மாணவர்களின் மகிழ்ச்சியான, கவலையற்ற வாழ்க்கையை வெளிப்படுத்துகிறது. அடக்கத்தின் முடிவில், அவர்கள் வகுப்பறையை விட்டு வெளியேறி, தங்கள் சுதந்திரத்தை அனுபவிக்கிறார்கள்.
இந்த தப்புதல் இளைஞர்களின் இலகுத்தன்மையையும் சுதந்திரங்களையும் எடுத்துக்காட்டியது. அடக்கம் 2: இது பாரதநாட்டியத்தின் மூலம் விளக்கப்படுகிறது. இந்த அடக்கத்தில் உள(மன)நிலை மெல்ல மாறுகிறது. நடனத்தின் இயக்கங்கள் மற்றும் சைகைகள் மகிழ்ச்சியான இலகுத்தன்மையிலிருந்து பதட்டமடைந்த வலிமையான உணர்வுகளுக்கு மாறுவதை வெளிப்படுத்துகின்றன.
ஒரு திருப்பம் விரைவில் நிகழவிருக்கிறது என்பதை இது தெளிவாக உணர்த்துகிறது. சுற்றுப்புறத்தின் ஒளி-நிழல் மாற்றங்களும் இந்த உணர்வை மேலும் வலுப்படுத்தி இருந்தன. அடக்கம் 3: போர் முடிந்த பிறகு, முக்கிய பாத்திரம் தனியாக இருக்கும். தன்னுடைய அன்பிற்குரியவர்கள் இனி இல்லை, தன்னுடைய தாயகம் அழிக்கப்பட்டது. ஒரு இருண்ட காட்டில் மற்றும் அழிந்த நகரத்தில் நடனமாடும் இந்த பாத்திரம், தனது வலியையும் நம்பிக்கையிழப்பையும் வெளிப்படுத்தி நின்றது.
இந்த அடக்கம் போர் விளைவுகளை சமாளிப்பதும், வாழ்க்கையை மீண்டும் உருவாக்குவதும் எவ்வளவு கடினம் என்பதை ஒலி ஒளிக் காட்சிகளால் வெளிப்படுத்தி உள்ளத்தில் நிலைத்து நிற்கின்றது. சமாதானத்தின் சாம்பல் நடனம், உணர்வுப்பூர்வமான காட்சிகள் மற்றும் சினிமாவியல் தொழில்நுட்பங்களை இணைத்து ஒரு தனித்துவமான அனுபவத்தை உருவாக்குகிறது.
துறைசார் திரையறிவு
நிறமாற்றங்கள், வலவனிலா (ட்ரோன்) காட்சிகள் மற்றும் துறைசார் திரையறிவுடன் சிறப்பான இயக்கங்கள் மூலம் இந்தக் கதையை வலிமையாக உரைத்துள்ளார் அம்பலன். திரு. அம்பலன் தெரிவுசெய்திருக்கும் இவ் ஒப்படைத் திட்டம் வெறும் ஒரு நடனத் தொகுப்பாக மட்டும் பார்க்க முடியாது. போரின் விளைவுகளைப் பற்றி சிந்திக்கவும், இரக்கம் காண்பிக்கவும், இழப்பு, நம்பிக்கை மற்றும் வலிமை ஆகிய தலைப்புகளைப் புரிந்துகொள்ளவும் ஒரு அழைப்பாகவும் உள்ளது.
"பொருத்தத்தொகுப்பு (Match Cut)" என்பது ஒரு திரைப்படத் தொகுப்G உத்தி ஆகும். இதில் ஒரு இயக்கத்தின் நடுவில் திரைத்தொகுப்பு வெட்டப்பட்டு, அதன் தொடர்ச்சி வேறு ஒரு படக் காட்சியின் மூலம் முன்னேற்றப்படுகிறது. இது இரண்டு காட்சிகளை இணைக்கும் கடினமான முறையாகும்;. மூன்று அடf;கங்களாக திரைப்படைத்தை அமைத்திருந்த அம்பலன், வெவ்வேறு நிகழ்வுகளை ஒரு நேரத்திலும் இடத்திலும் வேறுபட்ட காட்சிகளை படத்தின் போக்கிற்கு ஒத்தமுறையில் இயக்கி, திiu; தொகுப்பில் ஒரு கோட்டில் இணைத்துள்ளார். இத்தகைய வடிவம் இப்படத்திற்கு மிகப் பொருந்திப்போயுள்ளது.
திரையில் நாம் காணும் மனித உணர்ச்சிகளை ஒரு தொடர்பு உள்வாங்கி வெளிப்படுத்த இம்முறமை கைகொடுத்துள்ளது. இதனை அம்பலனின் திரையினைக் கண்ணுற்ற ஆசிரியரும் பாராட்டினார்.
3 பாடடுக்களைக்கொண்டு 3 காட்சிகளை தென்னிந்திய திரைப்பாடல்களை உள்ளடக்கி, ஈழத்தின் வலியாகவும், என்னாட்டவார் காண்கினும் அவர்களும் தம் வலியாக ஏற்கக்கூடிய வடிவிலும், தொய்வின்றிய காட்சிகளுடனும், துள்ளலிசை நடனம் கற்ற அம்பலன் தென்னார் சிவன் கூத்தான பரதத்தை கையிலெடுத்து, விரைந்து கற்று பொருத்தமாக காட்சிப்படுத்தி பெறக்கூடிய உச்சிப்புள்ளிகளைப் பெற்று சிறந்த ஒப்படை ஆக்கி அளித்துள்ளார்.
இதனை அனைத்து தமிழர்களும் பாராட்டலாம். ஈழத்தமிழ் மாணவர்கள் தமது கல்வி ஒப்படைக்கு எமது இனத்தின் வலியின் ஒரு சிறு விகிதம் தன்னும் எடுத்துச் சொல்ல வேண்டும் எனும் எதிர்பார்ப்பு பல்லாயிரம் தமிழ் மக்களுக்கு உண்டு.
சில தமிழ்மாணவர்கள் தவறான வழிகாட்டலில் இணையத்தில் உண்மைக்குப் புறம்பாக தமிழ்மக்களது வரலாற்றை திரிவு செய்து பரப்பியிருக்கும் தகவல்களைக் உசாத்துணையாக்கி அளிக்கும் ஒப்படைகள் அளிக்கும் அவலம் அங்காங்கே கண்ணுற்றுள்ளோம்.
இத் திறன்கள் இவரின் எதிர்கால கல்வி மற்றும் தொழிலும் தமிழினத்திற்கும் மேன்மை பயற்கும் என்பதை ஒப்படை அறிமுகத்தை நேரில் நிகழ்வாகக் கண்டோர் உள்ளத்தில் பதிவாகி உள்ளது.