மல்லாவியில் தியாக தீபம் திலீபனுக்கு உணர்வுபூர்வமாக அஞ்சலி (PHOTOS)
தியாக தீபம் திலீபனின் 36 ஆவது ஆண்டு நினைவு நாளினை முன்னிட்டு கடந்த 15 ஆம் திகதி பொத்துவில்லில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினால் ஆரம்பிக்கப்பட்ட ஊர்தி பவனியானது கிழக்கு மாகாணத்தில் இருந்து, வடக்கு மாகாணத்திற்கு வருகை தந்துள்ளது.
அந்தவகையில் நேற்று (21.09.2023) எட்டாவது நாள் மன்னார் மாவட்டத்திலிருந்து பயணத்தை ஆரம்பித்த ஊர்தி பவனியானது மன்னாரிலிருந்து வெள்ளாங்குளம் ஊடாக மல்லாவியை வந்தடைந்துள்ளது.
ஊர்தி பவனி
மல்லாவியினுடைய பல்வேறு பகுதிகளுக்கும் பாண்டியன்குளம் உள்ளிட்ட பகுதிகளுக்கும் சென்று மக்களது அஞ்சலியை தொடர்ந்து நேற்றைய எட்டாம் நாள் பயணம் மல்லாவியுடன் நிறைவு பெற்றுள்ளது.
வடமராட்சி கிழக்கில், இந்த ஊர்தி பவனி நேற்றைய தினம்(22.09.2023) மக்கள் அஞ்சலிக்காக செல்ல இருக்கின்றதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதேபோல மல்லாவிக்கு வருகை தந்த ஊர்திக்கு, நேற்றய தினம் மல்லாவி, துணுக்காய், மாந்தை கிழக்கு, பிரதேச செயலக பிரிவுகளுக்கு உட்பட்ட பகுதிகளை சேர்ந்த, பல்வேறு இடங்களிலும் மக்கள் உணர்வு பூர்வமாக அஞ்சலி செலுத்தியுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |






