நாகர்கோவிலில் படுகொலை செய்யப்பட்ட மாணவர்களுக்கு நினைவேந்தல்
யாழ்ப்பாணம், வடமராட்சி கிழக்கு நாகர்கோயில் பாடசாலை மாணவர்கள் 39 பேர் கொடூரமாக படுகொலை செய்யப்பட்ட நினைவு நாள் நேற்று (22) நினைவுக் கூரப்பட்டுள்ளது.
இலங்கை விமானப்படையின் இரண்டு புக்காரா விமானங்களின் தாக்குதலில் 1995/09/22 அன்று பகல் 12:05 மணியளவில் படுகொலை செய்யப்பட்ட 21 மாணவர்களின் 28 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு பாடசாலை வளாகத்தில் அதன் அதிபர் கண்ணதாசன் தலைமையில் இடம்பெற்றது.
1995 செப்டெம்பர் 22 ஆம் திகதி யாழ்ப்பாணம், நாகர்கோயில் மத்திய பாடசாலையில் இலங்கை விமானப் படையினரின் குண்டுவீச்சில் 39 மாணவர்கள் உயிரிழந்தனர்.
தொடர்ந்து பொது நினைவாலயத்திற்கு மலர் மாலை, மலர் அஞ்சலி என்பன செலுத்தப்பட்டதை தொடர்ந்து படுகொலை செய்யப்பட்ட 21 மாணவர்களின் பெற்றோர்கள், உறவினர்கள் நினைவு சுடரேற்றி உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தியுள்ளனர்.
இதனை தொடர்ந்து தலைமை உரையினை பாடசாலை
அதிபர் கண்ணதாசன் நிகழ்த்தியவை தொடர்ந்து நினைவுரையினை படுகொலை செய்யப்பட்ட
காலத்தில் அதிபராக இருந்த ஓய்வு பெற்ற அதிபர் மகேந்திரம் நிகழ்த்தினார்.
இதில் கிறிஸ்தவ மதகுரு, நாகர்கோவில் கிராம மக்கள், படுகொலை செய்யப்பட்ட மாணவர்களின் உறவினர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.