முள்ளிவாய்க்கால் நினைவேந்தலில் காசி ஆனந்தன் - தமிழக பா.ஜ.க தலைவர் - பழநெடுமாறன்
தமிழகத்தில் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவேந்தல் கருத்தரங்கமொன்று இடம்பெற்றுள்ளது.
இந்நிகழ்வு தமிழ் நாடு மாணவர் கூட்டமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதுடன்,கருத்தரங்கில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கமும் பங்கேற்றுள்ளார்.

2009 ஆம் ஆண்டு இடம்பெற்ற இறுதி யுத்தத்தில் இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு தமிழர்களுக்கான நீதி மறுக்கப்பட்டு வருகின்ற நிலையில் இன்று 13 ஆண்டுகளை கடந்துள்ளது.
இந்நிலையிலும், எதிர்வரும் மே 18 ஆம் திகதி முள்ளிவாய்க்காலில் இனப்படுகொலை நினைவேந்தல் முன்னெடுக்கப்பட இருக்கின்றன.

இந்த கருத்தரங்கில் தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, பழநெடுமாறன், உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன், கே.எஸ். ராதாகிருஷ்ணன் தி.மு.க போன்றோர் பங்கேற்பார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்போது இறுதி யுத்தத்தில் உயிரிழந்த உறவுகளுக்கு மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.

மரண வீட்டில் அரசியல்.. 1 நாள் முன்
இந்தியாவுக்கு வரும் புடின்: விமானத்தில் கொண்டு வரப்பட்ட Aurus Senat கார்! மிரட்டும் தனித்துவம் News Lankasri