ஸ்ரீவிக்ரம இராஜசிங்க மன்னனின் நினைவேந்தல் அனுஷ்டிப்பு
பிரித்தானிய ஆட்சியில் இருந்து இலங்கை சுதந்திரமடைந்து 75 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு, கண்டியின் கடைசி மன்னன் ஸ்ரீவிக்ரம இராஜசிங்கனின் நினைவேந்தல் தென்னிந்திய நகரமான வேலூரில் நடைபெற்றது.
ஜனவரி 30 திகதியன்று இந்த நிகழ்வு நடைபெற்றுள்ளது.
191 ஆண்டுகளுக்கு முன்னர் ஸ்ரீவிக்ரம இராஜசிங்கன் இறந்ததாக வரலாறுகள் கூறுகின்றன.
மத வழிபாடுகள்
இந்தநிலையில் அவருடைய சந்ததியினர் அவரது மரணத்தைக் குறிக்கும் வகையில் இன்றும் மத வழிபாடுகளை நடத்துகிறார்கள்.
வேலூரில் முட்டு மண்டபம் என்ற இடத்தில் அரசர் மற்றும் அரசியின் அஸ்தி புதைக்கப்பட்டுள்ளது.
மன்னன் காவலில் வைக்கப்பட்ட இடம் கண்டி மஹால் என்று அழைக்கப்படும் ஒரு மாளிகையாகும்.
இது மைசூர் இராச்சியத்தின் ஆட்சியாளரான திப்பு சுல்தானுக்கு சொந்தமானது.
ஸ்ரீவிக்ரம ராஜசிங்கன் மரணம்
கண்டி அரசனும் அவனுடைய சில பிரபுக்களும் 16 வருடங்களாக அங்கு சிறை வைக்கப்பட்டிருந்தனர்.
ஸ்ரீவிக்ரம ராஜசிங்கன் தனது 52ஆவது வயதில் அஜீரணத்தால் ஏற்படும் சிக்கல்களால் இறந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவரது உடலம் பாலாற்றின் கரையில் தகனம் செய்யப்பட்டு ஆங்கிலேயர் காலத்தில்
தமிழ் பாரம்பரியத்தில் ஒரு நினைவுச்சின்னம் அமைக்கப்பட்டது.
அப்போதிருந்து, அரச குடும்பத்தின் இறப்பு நினைவு, இந்து முறைப்படி
அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது.

சரிகமப Li’l Champs சீசன் 4ல் வெற்றிப்பெற்றவர்களுக்கு கிடைத்த பரிசுத் தொகை எவ்வளவு தெரியுமா? Cineulagam
