வவுனியாவில் இளங்கோ அடிகளாரின் நினைவு தினம் அனுஷ்டிப்பு
வவுனியா - கோவில்குளம் சிவன் கோவில் பகுதியில் இளங்கோ அடிகளாருக்கு நினைவுதினம் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வானது, சித்திரை பௌர்ணமி தினமான நேற்று (23.04.2024) இடம்பெற்றுள்ளது.
நினைவு தின நிகழ்வு
குறித்த நிகழ்வானது வவுனியா நகரசபையின் ஏற்பாட்டில் தமிழ் விருட்சம் அமைப்பின் தலைவர் செ.சந்திரகுமார் தலைமையில் நடைபெற்றுள்ளது.
இதன்போது, அடிகளாரின் திருவுருவச்சிலைக்கு மாலை அணிவித்து மலர் அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளதுடன் அடிகளார் தொடர்பான சிறப்புரைகளும் இடம்பெற்றுள்ளன.
இந்நிகழ்வில், வவுனியா நகரசபை செயலாளர் அ.பாலகிருபன், முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் ஜி.ரி.லிங்கநாதன், முன்னாள் நகரசபை உறுப்பினர் சுமந்திரன், இந்து அன்பக சிறுவர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் எனப் பலர் கலந்து கொண்டுள்ளனர்.







திருமணத்திற்கு 3 ஆண்டுகளுக்கு முன் கணவருடன் DJ பார்ட்டியில் பிரியங்கா தேஷ்பாண்டே.. வீடியோ இதோ Cineulagam

வீட்டை சுத்தம் செய்யும் போது கிடைத்த தந்தையின் பழைய பாஸ்புக்.., ஒரே இரவில் மகன் கோடீஸ்வரன் News Lankasri
