இராணுவத்தினரின் கடும் எதிர்ப்பையும் மீறி நடைபெற்ற சிரமதான பணி(Photos)
வல்வெட்டித்துறை தீருவில் பகுதியில் இராணுவத்தினரின் கடும் எதிர்ப்பையும் மீறி மாவீரர் தின நினைவேந்தலுக்காக சிரமதானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
வல்வெட்டித்துறையில் அமைந்துள்ள தீருவில் பகுதியில் நேற்று மதியம் சிரமதானப்பணி இடம்பெற்றுள்ளது.
இதன்போது சிதைவடைந்திருந்த நினைவுச்சிலை அருகே இருந்த பற்றைகளை வெட்ட முற்பட்டபோது இராணுவத்தினர் சிலையருகே எதுவும் செய்யமுடியாது என அறிவுறுத்தியுள்ளனர்.இதனையும் மீறி பற்றை துப்பரவு செய்யப்பட்டுள்ளது.
மாவீரர் தின நினைவேந்தல்

இதன்போது இராணுவத்தினர் ஒளிப்படம் எடுத்து அச்சுறுத்தியுள்ளனர். இதன்போது இராணுவத்தினரும் பொலிஸாரும் வருகை தந்து தமது எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.
தீருவில் மைதானத்தில் மட்டுமே உங்களுக்கு நகரசபை அனுமதி உள்ளது. ஆனால் புலிச்சின்னங்கள் மீது எதையும் செய்யவேண்டாம் என அச்சுறுத்தியதுடன் ஒளிப்படங்கள் மூலம் அனைவரையும் புகைப்படம் எடுத்துள்ளனர்.

வல்வெட்டித்துறை தவிசாளர் உட்பட்ட்ட குழுவினர் தமது எதிர்ப்பை வெளியிட்டு துப்பரவு பணியை நிறைவேற்றி விட்டு சென்றுள்ளனர். எனினும் நான்கு இராணுவத்தினர் தொடர்ச்சியாக அங்கு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இந்தியாவில் கிரிப்டோகரன்சி வைத்திருப்பவர்களுக்கு மகிழ்ச்சியான தீர்ப்பை வழங்கிய நீதிமன்றம் News Lankasri
கணவரை பிரிந்த நிலையில் ஹன்சிகா எங்கே சென்றிருக்கிறார் பாருங்க.. அதுவும் யாருடன் தெரியுமா? Cineulagam
மூன்றாம் உலகப்போர் வெடித்தால் சேமித்துவைக்கவேண்டிய 9 உணவுகள்: பிரித்தானிய நிறுவனம் ஆலோசனை News Lankasri