கோவிட் தொற்று காரணமாக உயிரிழந்த இலங்கை தமிழரசு கட்சி உறுப்பினர்களுக்கு நினைவேந்தல் அனுஷ்டிப்பு (Photos)
கோவிட் தொற்று காரணமாக உயிரிழந்த திருகோணமலை மாவட்ட இலங்கை தமிழரசு கட்சி உறுப்பினர்களை நினைவேந்தும் நிகழ்வு ஒன்று திருகோணமலையில் இடம்பெற்றது.
உட்துறைமுக வீதியில் அமைந்துள்ள இந்து கலாச்சார மண்டபத்தில் இன்று (29) மாலை 3.00 மணியளவில் நடைபெற்றது.
திருகோணமலை மாவட்ட தமிழரசு கட்சியின் ஏற்பாட்டில் இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவின் தலைமையில் இந் நினைவேந்தல் இடம்பெற்றது.
உயிரிழந்த இலங்கை தமிழரசு கட்சி உறுப்பினர்கள்
தமிழரசு கட்சியில் இருந்து மக்களுக்காக பாடுபட்ட கட்சியின் மூத்த உறுப்பினரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான அமரர். க.துரைரெட்ணசிங்கம், தமிழரசு கட்சியின் மத்திய குழு உறுப்பினரும் முன்னாள் திருகோணமலை நகரசபை உறுப்பினருமான அமரர் கோ.சத்தியசீலராஜா, தமிழரசு கட்சியின் குச்சவெளி திரியாய் வட்டார கிளையின் முன்னாள் தலைவர் பொன்னம்பலம் இராமநாதன், கிண்ணியா பைசல் நகர் வட்டாரகிளை முன்னாள் தலைவர் மு.க.மஹ்ரூப் முன்னாள் வில்லூன்டி வட்டாரக்கிளை தலைவர் கனகமகேந்திரா ஆகியோரை நினைவு கோரி அவர்களுக்கான நினைவேந்தல் அனுஷ்டிப்பு இடம்பெற்றது.
இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா பொதுச்செயலாளர் டாக்டர்.சத்தியலிங்கம்,நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், சி.சிறிதரன்,இரா.சாணக்கியன், மற்றும் கட்சியின் உறுப்பினர்கள், கட்சியின் ஆதரவாளர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
ராஜபக்சக்களை திருப்திப்படுத்தும் அரசியலமைப்பு திருத்தம் - சஜித் கண்டனம் |


5 நாள் முடிவில் வெற்றிப்பெற்றுள்ள டிராகன் திரைப்படம் செய்த வசூல்... தமிழகத்தில் மட்டுமே இவ்வளவா? Cineulagam

ட்ரம்ப் முன்வைத்த ஒப்பந்தத்துக்கு சம்மதித்தார் உக்ரைன் ஜனாதிபதி: விரைவில் கையெழுத்தாகலாம் News Lankasri
