ராஜபக்சக்களை திருப்திப்படுத்தும் அரசியலமைப்பு திருத்தம் - சஜித் கண்டனம்
ராஜபக்சக்களை திருப்திப்படுத்தும் அரசியலமைப்புத் திருத்தமொன்றை ஆளுங்கட்சி முன்வைத்துள்ளதாக சஜித் பிரேமதாச குற்றம் சாட்டியுள்ளார்.
அரசியலமைப்பின் 21ம் திருத்தச் சட்டத்திற்கு எதிராக குறித்த அரசியலமைப்புத் திருத்தச் சட்டம் முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தொடர்ந்தும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று ஐக்கிய மக்கள் சக்தி ஆதரவாளர்களின் சந்திப்பின்போது அவர் மேற்கண்ட கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள சஜித் பிரேமதாச,
21ம் திருத்தச் சட்டம் முன்வைப்பு
ஐக்கிய மக்கள் சக்தி நிறைவான 21ம் திருத்தச் சட்டமொன்றை முன்வைத்துள்ளது. அதனை வெற்றிகரமாக நிறைவேற்றிக் கொள்ள நாங்கள் முயற்சிப்போம் ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளரும்,நாடாளுமன்ற உறுப்பினருமான ரஞ்சித் மத்தும பண்டார குறித்த திருத்தச் சட்டத்தை தனிநபர் பிரேரணையாக முன்வைத்துள்ளார்.
அதனை தோற்கடிக்கவும், நீர்த்துப் போகச் செய்யவும் மேற்கொள்ளும் சதிகளை உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும்.
நிறைவேற்று அதிகாரத்தை இல்லாதொழிப்பதற்கு முயற்சிகளை மேற்கொள்ள வேண்டிய சந்தர்ப்பத்தில் ஒரு சில சந்தர்ப்பவாதிகள் ராஜபக்ஷக்களைப் பாதுகாக்க முயற்சித்து வருவதாகவும் சஜித் பிரேமதாச தொடர்ந்தும் குற்றம் சாட்டியுள்ளார்.





அந்த முடிவுக்கு வரவில்லை என்றால்... இந்தியா பேரிழப்பை சந்திக்கும்: அமெரிக்கா அடுத்த மிரட்டல் News Lankasri
